வீடியோ : பாட்ஷா பாய் போல கையில் முத்தமிட்ட சஹால் – 6 மாதத்தில் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் புதிய உலக சாதனை படைத்த சூரியகுமார்

Advertisement

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிய இந்தியா முதல் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றாலும் 2வது போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. அதனால் 1 – 1 என்ற சமநிலை பெற்ற இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான கடைசி போட்டி ஜனவரி 7ஆம் தேதியன்று இரவு 7 மணிக்கு ராஜ்கோட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 228/5 ரன்கள் குவித்து அசத்தியது.

Suryakumar-Yadav

இந்தியாவுக்கு இஷான் கிசான் ஆரம்பத்திலேயே 1 ரன்னில் அவுட்டானாலும் 2வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டிய ராகுல் திரிபாதி 5 பவுண்டரி 3 சிக்ஸருடன் 35 (16) ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் மறுபுறம் நின்ற மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில்லுடன் இணைந்து இலங்கை பவுலவர்களை தமக்கே உரித்தான பாணியில் முதல் பந்திலிருந்தே சரமாரியாக அடித்து நொறுக்கினார். குறிப்பாக விக்கெட் கீப்பருக்கு பின் திசையில் அவர் பறக்க விட்ட சிக்சர்களை பார்த்து ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் வியந்து போனார்கள்.

- Advertisement -

உலகசாதனை:
அவருடன் மறுபுறம் கம்பெனி கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்த சுப்மன் கில் தனது பங்கிற்கு 2 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 46 (36) ரன்கள் குவித்து 3வது விக்கெட்டுக்கு 111 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் இலங்கை பவுலர்களை வெளுத்து வாங்கிய சூரியகுமார் யாதவ் 7 பவுண்டரி 9 சிக்ஸருடன் 112* (51) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அவருடன் அக்சர் பட்டேல் 21* (9) ரன்கள் விளாசி இந்தியாவை மேலும் வலுப்படுத்தினார்.

IND vs SL

அதை தொடர்ந்து 229 ரன்களை துரத்திய இலங்கை இந்தியாவின் தரமான பந்து வீச்சில் ஆரம்ப முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 16.4 ஓவரில் 137 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் சனாக்கா மற்றும் குசால் மெண்டிஸ் தலா 23 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 3 விக்கெட்கள் எடுத்தார். அதனால் 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்று சொந்த மண்ணில் தங்களை கில்லி என்றும் உலகின் நம்பர் ஒன் டி20 அணி என்பதையும் நிரூபித்துள்ளது.

- Advertisement -

அத்துடன் விராட் கோலி உள்ளிட்ட முதன்மை வீரர்கள் இல்லாமலேயே ஹர்திக் பாண்டியா தலைமையில் அசத்திய இளம் அணி 2024 டி20 உலகக் கோப்பை பயணத்தை வெற்றியுடன் துவக்கியுள்ளது. இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி சதமடித்து முக்கிய பங்காற்றிய சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இப்போட்டியில் எப்படி பந்து வீசினாலும் கீழே விழுந்தாவது மைதானத்தில் நாலாபுறங்களிலும் சிக்ஸர்களை பறக்க விட்ட அவரது பேட்டிங்கை பார்த்து அனைவரும் வியந்தனர். அதில் ஒரு படி மேலே சென்ற யுஸ்வேந்திர சஹால் போட்டியின் முடிவில் பாட்ஷா பாய் போல சூரியகுமாரின் 2 கைகளையும் தன்னுடைய 2 கண்களில் ஒத்தி பின்னர் முத்தமிட்டார்.

அத்துடன் நல்ல வேளையாக நான் சூரியகுமார் இருக்கும் அணியில் விளையாடுகிறேன் என்றும் அவர் கலகலப்பாக பேசினார். அப்படி விவரிக்க வார்த்தைகள் இல்லாத அளவுக்கு பேட்டிங்கில் மாயாஜாலம் நிகழ்த்திய அவர் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் கடந்த ஒன்றரை வருடங்களில் அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தி குறுகிய காலத்திலேயே உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்துள்ளார். குறிப்பாக எதிரணி எப்படி பந்து வீசினாலும் அடித்து நொறுக்கும் அவரை ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று கொண்டாடுகிறார்கள்.

- Advertisement -

1. முன்னதாக இப்போட்டியில் 51 பந்துகளில் 219.61 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் தன்னுடைய 3வது சதத்தை விளாசிய சூரியகுமார் ஏற்கனவே 2022 நவம்பரில் நியூசிலாந்துக்கு எதிராக 111* (51), ஜூலையில் இங்கிலாந்துக்கு எதிராக 117 (55) என கடந்த 6 மாதங்களில் இதுவரை விளாசிய 3 சதங்களையும் 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்கசூரியகுமாருக்கு எதிரா நான் பந்துவீசுனா எப்படி இருக்கும் தெரியுமா? – வெற்றிக்கு பிறகு பாண்டியா பேசியது என்ன?

அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் 3 சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற உலக சாதனையை சூரியகுமார் படைத்துள்ளார். இதற்கு முன் பிரெண்டன் மெக்கெல்லம், கிறிஸ் கெயில், டேவிட் மில்லர், ஆரோன் பின்ச், எவின் லெவிஸ், கிளன் மேக்ஸ்வெல் ஆகியோர்அதிகபட்சமாக தலா 2 சதங்களை 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் பதிவு செய்துள்ளார்கள்.

Advertisement