சூரியகுமாருக்கு எதிரா நான் பந்துவீசுனா எப்படி இருக்கும் தெரியுமா? – வெற்றிக்கு பிறகு பாண்டியா பேசியது என்ன?

Pandya-and-SKY
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரினை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இழந்துள்ளது. ஹார்டிக் பாண்டியாவின் தலைமையிலான இந்திய அணி முதல் போட்டியில் வெற்றியை சந்தித்து இருந்த வேளையில் இரண்டாவது போட்டியில் தோல்வியை சந்தித்தது. இப்படி தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்ததால் தொடரில் வெற்றி தீர்மானிக்கும் முக்கியமான மூன்றாவது போட்டி நேற்று ராஜ்கோட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

IND vs SL

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பாண்டியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் என்ற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது.

பின்னர் 229 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது 137 ரன்கள் மட்டுமே குவித்ததால் 91 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக சூரியகுமார் யாதவ் திகழ்ந்தார். இந்த போட்டியில் 51 பந்துகளை சந்தித்த அவர் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 112 ரன்களை குவித்து அசத்தியிருந்தார்.

Suryakumar Yadav 1

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா பல்வேறு சுவாரசியமான விடயங்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : சூரியகுமார் யாதவின் இந்த சிறப்பான பேட்டிங் ரசிகர்களுக்கு நல்ல என்டர்டெயின்மென்ட்டாக அமைந்திருக்கும். பேட்டிங் செய்வது எவ்வளவு ஈஸியான ஒன்று என்று அவர் காண்பித்து விட்டார். ஆனால் நம்மால் அதுமுடியாது.

- Advertisement -

ஒருவேளை நான் அவருக்கு எதிராக பந்துவீசி இருந்தால் கட்டாயம் மனம் நொந்து உடைந்து போயிருப்பேன். அந்த அளவிற்கு அவர் அதிரடி காட்டினார். சூரியகுமார் யாதவ் போன்ற பேட்ஸ்மேன்களுக்கு எந்த ஒரு அறிவுரையும் கூறத் தேவையில்லை. என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கே தெரியும். இந்த போட்டியில் அவர் விளையாடிய விதம் பிரமாதமாக இருந்தது.

இதையும் படிங்க : IND vs SL : டி20 கிரிக்கெட்டில் யாரும் படைக்காத சாதனையை அசால்ட்டாக நடத்திக்காட்டிய – சூரியகுமார் யாதவ்

இந்திய அணியின் கேப்டனாக நான் வீரர்களை ஆதரிக்கவே விரும்புகிறேன். தொடர்ச்சியாக வீரர்களை நாம் ஆதரித்து வந்தால் கட்டாயம் அவர்களிடம் இருந்து நல்ல கிரிக்கெட் வெளியாகும். நமது அணியில் தற்போது ஏகப்பட்ட சிறப்பான வீரர்கள் உள்ளனர். நிச்சயம் அவர்களை ஆதரித்து நான் இன்னும் அணியை வலிமைப்படுத்துவேன் என பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement