IND vs SL : டி20 கிரிக்கெட்டில் யாரும் படைக்காத சாதனையை அசால்ட்டாக நடத்திக்காட்டிய – சூரியகுமார் யாதவ்

Suryakumar-Yadav
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியானது நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 91 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றியது.

Suryakumar Yadav 2

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய இலங்கை அணி 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த போட்டியில் மொத்தம் 51 பந்துகளை சந்தித்த அவர் 9 சிக்சர் மற்றும் 7 பவுண்டரி என 112 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

Suryakumar Yadav 1

அவரது இந்த சதம் மிகப் பிரமாதமாக அமைந்ததோடு மட்டுமின்றி அவரது ஒவ்வொரு ஷாட் களையும் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்றும் அளவிற்கு அவர் மிகச் சிறப்பான முறையில் பேட்டிங் செய்தார். இந்நிலையில் அவர் அடித்த இந்த சதம் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வேறு எந்த ஒரு வீரரும் படைக்காத அற்புதமான சாதனை ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

அதன்படி டி20 கிரிக்கெட்டில் ஓப்பனராக களம் இறங்காமல் மிடில் ஆர்டரில் விளையாடி 3 சதங்களை அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை சூரியகுமார் யாதவ் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக சதம் அடித்த சூரியகுமார் யாதவ் தற்போது சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு எதிராக சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க : தங்களின் ஐபிஎல் 2023 சம்பளத்தால் வெளிநாட்டு டி20 தொடரில் ஒரு அணியையே வாங்ககூடிய 5 இந்திய வீரர்கள்

இப்படி ஓப்பனராக இல்லாமல் மிடில் ஆர்டரில் மூன்று சதம் அடித்த ஒரே ஒரு பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ள சூரியகுமார் யாதவ் அதுமட்டும் இன்றி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மாவிற்கு (4) அடுத்து சூரியகுமார் (3) இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement