தங்களின் ஐபிஎல் 2023 சம்பளத்தால் வெளிநாட்டு டி20 தொடரில் ஒரு அணியையே வாங்ககூடிய 5 இந்திய வீரர்கள்

- Advertisement -

இந்தியாவின் நம்பர் ஒன் விளையாட்டு தொடரான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் கோடைகாலம் கோலாகலமாக நடைபெறுகிறது. முன்னதாக கடந்த 2008இல் 8 அணியுடன் சாதாரண டி20 தொடராக துவங்கப்பட்ட ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் பல பரிணாமங்களை கடந்து இன்று தரத்திலும் பணத்திலும் உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதே போலவே கடந்த 15 வருடங்களில் அதில் அணிகளை வாங்கிய உரிமையாளர்களும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி விளையாடிய வீரர்களும் இன்று பன்மடங்கு உயர்ந்துள்ளார்கள். மேலும் 2022 புதிதாக உருவாக்கப்பட்ட லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகள் 12,715 கோடிகளுக்கு விலை போனது உலகையே திரும்பி பார்க்க வைத்தது.

psl 1

- Advertisement -

அதே போலவே ஐபிஎல் தொடரில் விளையாடும் சில நட்சத்திர வீரர்கள் வாங்கும் சம்பளம் இதர டி20 தொடர்களில் ஒரு அணியின் மொத்த மதிப்பை விட அதிகமாகும். எடுத்துக்காட்டாக பாகிஸ்தான் நடத்தும் பிஎஸ்எல் தொடரில் குவெட்டா அணி 10 வருடத்துக்கு 11 மில்லியன் டாலர் விலையில் விற்கப்பட்டது. அதாவது ஒரு வருடத்திற்கு 1.1 மில்லியன் டாலராகும். அது ஐபிஎல் தொடரில் விளையாடும் சில நட்சத்திர வீரர்களின் சம்பளத்தை விட குறைவாகும். அதே போல் இந்த வருடம் தென் ஆப்பிரிக்காவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள டி20 தொடரில் ஒரு அணியின் மதிப்பு 1.5 முதல் 2 மில்லியன் டாலர்களாகும்.

5 நட்சத்திரங்கள்:
அது இந்திய ரூபாயில் 12.41 முதல் 16.55 கோடிகளாகும். அந்த வகையில் 2023 ஐபிஎல் தொடரில் விளையாடும் சில நட்சத்திர இந்திய வீரர்களால் தங்களுடைய ஒரு சீசன் சம்பளத்தை வைத்து பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் நடைபெறும் டி20 தொடரில் ஒரு அணியையே வாங்க முடியும். அவர்களைப் பற்றி பார்ப்போம்:

Kohli

1. விராட் கோலி: ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான இவர் 2020 வாக்கில் வரலாற்றிலேயே உச்சபட்சமாக 17 கோடிகளை வாங்கினார். இருப்பினும் கடந்த வருடம் தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டு 15 கோடிக்கு விளையாடி வரும் அவர் ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் அதிக சம்பளத்தைப் பெற்ற வீரர்களில் ஒருவராக (173.2 கோடி) ஏற்கனவே சாதனை படைத்துள்ளார். எனவே அவர் நினைத்தால் ஒரு அணி மட்டுமல்ல ஒட்டுமொத்த பிஎஸ்எல் தொடரையும் வாங்க முடியும் என்றே சொல்லலாம்.

- Advertisement -

2. ரோஹித் சர்மா: விராட் கோலியை போலவே நவீன கிரிக்கெட்டில் அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி இன்று இந்தியாவின் கேப்டனாகும் அளவுக்கு உயர்ந்துள்ள இவர் ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

Rohith

அதனால் 16 கோடி என்ற உச்சகட்ட சம்பளத்தை பெறும் இவர் ஒட்டுமொத்த வரலாற்றில் அதிக சம்பளத்தை வாங்கிய (178.6 கோடி) வீரர்களில் ஒருவராக சாதனை படைத்துள்ளார். எனவே இவர் நினைத்தாலும் வெளிநாட்டு தொடர்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட அணிகளை எளிதாக வாங்க முடியும்.

- Advertisement -

3. கேஎல் ராகுல்: ஐபிஎல் தொடரில் இந்தியாவின் லேட்டஸ்ட் நட்சத்திரமாக அவதரித்துள்ள இவர் இந்த வருடம் 17 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு லக்னோ அணியின் கேப்டனாக விளையாடுகிறார். இவரை விட சாம் கரண் (18.5 கோடி), கேமரூன் கிரீன் (17.5 கோடி) போன்ற வெளிநாட்டு வீரர்கள் அதிக சம்பளத்தை வாங்கினாலும் இந்திய அளவில் ராகுல் தான் இந்த வருடம் அதிக சம்பளத்தை வாங்குகிறார். எனவே இவராலும் வெளிநாட்டு தொடர்களில் அணியை வாங்க முடியும்.

Rahul

4. ரிஷப் பண்ட்: கடந்த 2016இல் அறிமுகமாகி சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் இந்தியாவின் அடுத்த தலைமுறை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக கருதப்படும் இவர் டெல்லி அணியின் கேப்டனாக 16 கோடிக்கு விளையாடி வருகிறார். இவரும் தன்னுடைய ஒரு சீசன் சம்பளத்தை வைத்து வெளிநாட்டில் ஒரு அணியின் உரிமையாளராக எளிதாக மாறலாம்.

இதையும் படிங்க: ரன்களை விடுங்க, முதலில் உங்ககிட்ட ஃபிட்னெஸ் இருக்கா? இந்திய கேப்டன் ரோஹித்தை விளாசிய கபில் தேவ் – பேசியது என்ன

5. ரவீந்திர ஜடேஜா: கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்று இந்தியாவின் நம்பர் ஒன் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக ஜொலிக்கும் இவர் தோனியை மிஞ்சி சென்னை அணியில் 16 கோடி என்ற பெரிய தொகைக்கு தக்க வைக்கப்பட்டுள்ளார். எனவே இவர் நினைத்தாலும் எளிதாக வெளிநாடுகளில் ஒரு அணியை வளைத்து போட முடியும்.

Advertisement