அவருக்கு மட்டும் சான்ஸ் கொடுங்க பின்னிடுவாறு – சூர்யகுமாரை வைத்துக்கொண்டே ரவி சாஸ்திரி நேரடி கோரிக்கை

- Advertisement -

வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை விராட் கோலியின் அபார ஆட்டத்தால் தோற்கடித்து 2வது போட்டியில் நெதர்லாந்தை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி நடை போட்டு வருகிறது. அதனால் குரூப் 2 பிரிவின் புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ள இந்தியா நாக் அவுட் சுற்று வாய்ப்பை ஆரம்பத்திலேயே உறுதி படுத்தியுள்ளது. முன்னதாக இந்த தொடரில் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் அசத்தலாக பேட்டிங் செய்ய துவங்கியுள்ளார்.

பொதுவாகவே களமிறங்கிய முதலே அதிரடியை துவக்கும் அவர் ராகுல் போன்ற இதர வீரர்களைப் போல் எப்போதுமே அதிக பந்துகளை தின்று அவுட்டாகி அடுத்து வரும் பேட்ஸ்மேன்களுக்கு பாரத்தை கொடுக்காத சூப்பரான ஸ்டைலை வைத்துள்ளார். எடுத்துக்காட்டாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ராகுல், ரோஹித் போல அதிக பந்துகளை எதிர்கொண்டு அழுத்தத்தை ஏற்படுத்தாமல் 10 பந்துகளில் 15 ரன்கள் அடித்து அவுட்டானார். அதே சமயம் பெரும்பாலான போட்டிகளில் அந்த அணுகுமுறையால் எதிரணிகளை நாலாபுறமும் சுழன்றடித்து ரன்களை சேர்த்து வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் அவர் இந்தியாவுக்காக தாமதமாக 30 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானாலும் இன்று டி20 போட்டிகளில் உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேனாக ஜொலிக்கிறார்.

- Advertisement -

நேரான பேச்சு:
பெரும்பாலும் 16 முதல் 30 வயதுக்குள் அறிமுகமாகும் வீரர்களுக்கு மத்தியில் கடுமையான போட்டிகளை கடந்து ஒருவழியாக கடந்த 2021ஆம் ஆண்டு அறிமுகமான அவர் இதுவரை குறை சொல்ல முடியாத அளவுக்கு அசத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் ஏபி டி வில்லியர்ஸ் என்றழைக்கும் அளவுக்கு மிரட்டும் அவர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்தியாவின் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அவதரித்துள்ளார். ஆனால் ஒரு வீரரின் உண்மையான திறமையை சோதிக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை வாய்ப்பு பெறாத அவர் சமீபத்திய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் தேர்வான போதிலும் விளையாடும் 11 பேர் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு பெறவில்லை.

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் அதிரடி காட்டுகிறார் என்பதற்காக சூரியகுமார் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று அர்த்தமல்ல எனக்கூறும் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி அவர் அனைத்து வகையான கிரிக்கெட்டுக்கும் பொருந்தும் அற்புதமான வீரர் என பாராட்டியுள்ளார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 5வது இடத்தில் வாய்ப்பு கொடுத்தால் இதே போல் அசத்துவார் என்று சூரியகுமாரை அருகில் வைத்துக் கொண்டே பாராட்டிய அவர் இது பற்றி நெதர்லாந்து போட்டிக்குப் பின் பேசியது பின்வருமாறு. “அவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடக் கூடிய வீரர் என்று நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரைப் பற்றி யாரும் பேச மாட்டார்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால் அவர் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் பொருந்தும் வீரர்”

- Advertisement -

“இந்த பையன் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாடி சிலரை ஆச்சரியப்படுத்துவார் என்று நான் சொல்வேன். அவரை 5வது இடத்தில் அனுப்பி சுதந்திரமாக விளையாடும் வாய்ப்பை கொடுங்கள்” என்று கூறி புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு நேரடியாகவே கோரிக்கை வைத்தார். அப்போது அருகில் நின்ற சூரியகுமார் யாதவ் ரவி சாஸ்திரி போன்ற ஜாம்பவான் தம்மை பாராட்டுவதை பார்த்து “யே” என்ற வகையில் இரு கைகளையும் உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அத்துடன் டி20 கிரிக்கெட்டில் பயிற்சியாளராக இருந்த அவரது தலைமையில் அறிமுகமானது போது ரவி சாஸ்திரி கூறியதைப் பற்றி சூரியகுமார் பேசியது பின்வருமாறு. “நான் அறிமுகமான போட்டிக்கு முன்பாக குளத்தின் ஓரத்தில் அமர்ந்திருந்த அவர் மைதானத்திற்கு சென்று எதிரணியை பந்தாடுமாறு என்னிடம் சொன்னது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

Advertisement