இந்திய அணி போல.. பாண்டியாவை கழற்றி விட்டு மும்பை அணிக்கும் கேப்டனாக ஆவீர்களா? சூர்யகுமார் பதில்

- Advertisement -

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2022 டி20 உலகக் கோப்பைக்கு பின் ரோஹித் சர்மா ஓய்வெடுத்த தொடர்களில் ஹர்திக் பாண்டியா இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டார். மேலும் 2024 டி20 உலகக் கோப்பையில் துணைக் கேப்டனாக விளையாடிய அவர் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

அதற்கிடையே ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது. அதனால் ரோஹித் சர்மா ஓய்வுக்கு பின் ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் கடைசி நேரத்தில் பாண்டியா ஃபிட்டாக இல்லை என்று சொல்லி சூரியகுமாரை புதிய கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார்.

- Advertisement -

அடுத்து மும்பை கேப்டனா:

முன்னதாக கடந்த வருடம் பாண்டியா தலைமையில் மோசமாக விளையாடிய மும்பை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறியது. அந்த சூழ்நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் மொத்த அணியும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதனால் ஹர்திக் பாண்டியா மீண்டும் கேப்டனாக தக்க வைக்கப்படுவாரா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

இந்நிலையில் இந்திய அணியைப் போல மும்பை ஐபிஎல் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்படுவீர்களா என்று சூரியகுமார் யாதவிடம் கேட்கப்பட்டது. அதற்கு கூக்லி பந்து போல இந்த கேள்வியை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என சூரியகுமார் யாதவ் பதிலளித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் என் மீது கூக்லி போட்டுள்ளீர்கள். இந்தியாவுக்காக கேப்டனாக செயல்படுவதில் நன்றாக உணர்கிறேன்”

- Advertisement -

மும்பை கேப்டன் வாய்ப்பு:

“சமீபத்தில் இலங்கையில் கேப்டனாக செயல்பட்ட நான் இதற்கு முன் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் இந்திய அணியை தலைமை தாங்கினேன். அணியை எப்படி முன்னோக்கி எடுத்துச் செல்வது என்பது பற்றி மற்ற கேப்டன்களிடம் கற்றுக் கொண்டுள்ளேன். எனவே அனைத்தும் எப்படி செல்கிறது என்பதை பற்றி பார்ப்போம். மற்றவற்றை நீங்கள் நேரம் வரும் போது அறிவீர்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க: 30 பந்துக்கு 30.. ஸ்லெட்ஜிங்க்கு அபராதம் போட்டாலும் பரவால்ல.. பண்ட் அறிவால் டி20 உ.கோ வென்றது பற்றி ரோஹித்

அதாவது இந்திய அணியை போலவே மும்பை அணிக்கும் கேப்டனாக செயல்படுவது தம்முடைய கையில் இல்லை என்று சூரியகுமார் கூறியுள்ளார். இருப்பினும் வாய்ப்பு கிடைத்தால் அதை செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார் ஆனால் அது நடக்குமா என்பதை தாமே பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் சூரியகுமார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement