சூரியகுமார் யாதவ் செய்தது தப்பு.. அவர் அப்படி பண்ணியிருக்க கூடாது.. பாகிஸ்தான் அதிகாரியால் வந்த வினை – விவரம் இதோ

SKY and Naqvi
- Advertisement -

2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று செப்டம்பர் 9-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக துவங்க இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஹாங்காங் என எட்டு நாடுகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரானது செப்டம்பர் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள வேளையில் இந்த தொடரில் வெற்றி பெறப்போவது யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சூரியகுமார் யாதவ் இப்படி செய்திருக்க கூடாது : ரசிகர்கள் கண்டனம்

செப்டம்பர் 9-ஆம் தேதியான இன்று இந்த 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது துவங்கும் முன்னர் நேற்று ஆசிய கோப்பை தொடருக்கான அறிமுக விழா நடைபெற்றது. இந்த விழாவின்போது பங்கேற்ற இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பாகிஸ்தான் அமைச்சருக்கு கை கொடுத்தது தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தும் விடயமாக மாறியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே இந்த ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவில் தாக்குதல் நடத்தியதில் பல்வேறு சுற்றுலா பயணிகள் பஹல்காமில் பலியாகி இருந்தனர். அதன் காரணமாக இனி இந்தியா எப்போதும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இருதரப்பு தொடர்பில் விளையாடாது என பி.சி.சி.ஐ அறிவித்துவிட்டது. இருந்தாலும் ஐசிசி நடத்தும் தொடர்களில் அதுவும் வெளிநாடுகளில் பொதுவான ஒரு மைதானத்தில் மோதும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே பங்கேற்கலாம் என்று முடிவு செய்தது.

அந்தவகையில் தற்போது ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட இருக்கிறது. ஆனால் இந்த போட்டியில் இந்திய அணி விளையாடக்கூடாது என்று ஒருபுறம் ரசிகர்களும், பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் இந்த இந்த போட்டியில் இந்திய அணி திட்டமிட்டபடி விளையாடும் என்று பிசிசிஐ அறிவித்து விட்டது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆசியக் கோப்பை தொடருக்கான டிராபி அறிமுக விழாவின் போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரான மோசின் நக்வி வந்திருந்தார். அவர் பாகிஸ்தான் நாட்டின் உள்துறை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். அதுமட்டுமின்றி இந்தியாவிற்கு எதிராக அண்மையில் சில மிரட்டல் விடுக்கும் வகையில் பேட்டிகளையும் அளித்திருந்தார்.

அதனால் ஆசிய கோப்பை அறிமுக விழாவின் போது அவரை புறக்கணிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறிவந்த வேளையில் அவர் நிகழ்ச்சிக்கு வந்தபோது இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் கைகுலுக்கி வரவேற்றார். இதுதான் தற்போது வினையாக மாறியுள்ளது. இப்படி சூரியகுமார் யாதவ் பாகிஸ்தான் அமைச்சருக்கு கை குலுக்கி இருக்கக்கூடாது என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பையில் இந்திய அணி வெற்றிபெற அவங்க 2 பேரோட பங்கு ரொம்ப முக்கியம் – பரத் அருண் பேட்டி

மேலும் அவருக்கு கை குலுக்குவதை தவிர்த்து சூரியகுமார் யாதவ் அமைதியாக தள்ளி நின்றிருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் சூரியகுமார் யாதவ் செய்தது தவறு என்றும் இந்தியா பாகிஸ்தான் போட்டியை தாங்கள் காணப்போவதில்லை என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement