ஆசிய கோப்பையில் இந்திய அணி வெற்றிபெற அவங்க 2 பேரோட பங்கு ரொம்ப முக்கியம் – பரத் அருண் பேட்டி

Bharat Arun
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள 17-வது ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க தயாராகி வருகிறது. செப்டம்பர் ஒன்பதாம் தேதி இன்று ஆசிய கோப்பை தொடரானது கோலாகலமாக துவங்க இருக்கும் வேளையில் நாளை செப்டம்பர் 10-ஆம் தேதி துபாய் மைதானத்தில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது முதலாவது லீக் போட்டியில் விளையாட இருக்கிறது.

அர்ஷ்தீப் சிங் மற்றும் பும்ரா குறித்து பேசிய பரத் அருண் :

அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்த்து நாளை இந்திய அணி தங்களது முதலாவது போட்டியில் விளையாட இருக்கும் வேளையில் தற்போது இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போட்டிக்கு முன்பாக பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்த ஆசிய கோப்பை தொடரில் ஜொலிக்கப்போகும் இந்திய வீரர்கள் குறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளரான பரத் அருண் எதிர்வரும் இந்த ஆசிய கோப்பை தொடரில் அசத்தப்போகும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அந்த வகையில் இந்த தொடரில் இந்திய அணி வெற்றிபெற மிக முக்கியமான காரணமாக அர்ஷ்தீப் சிங் மற்றும் பும்ரா ஆகியோர் இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த தொடரில் அவர்கள் எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் குறித்தும் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : அர்ஷ்தீப் சிங் என்ன செய்வார் என்பது நமக்குத் தெரியும். அவர் ஒரு மிகச் சிறப்பான பந்துவீச்சாளர் இருந்தாலும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது அவர் பிளேயிங் லெவனில் இடம்பெற்று விளையாடவில்லை. இதன் காரணமாக மேட்ச் பிராக்டீஸ் இல்லாமல் இருக்கலாம்.

- Advertisement -

அதனால் அவருடைய ரிதத்தில் கொஞ்சம் மாறுதல் இருக்கலாம். அந்த சவாலை கடந்து அவர் சிறப்பாக பந்துவீச வேண்டும். அதேபோன்று ஜஸ்ப்ரீத் பும்ரா இந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவதை காண நான் ஆவலாக காத்திருக்கிறேன். இருந்தாலும் இது அவருடைய முடிவு தான். ஏனெனில் பணிச்சுமை காரணமாக அவரால் அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியுமா? என்ற சந்தேகம் உள்ளது.

இதையும் படிங்க : ஆசிய கோப்பையில் சஞ்சு சாம்சன் விளையாடனும்னா இதுமட்டும் தான் ஒரே வாய்ப்பு – எம்.எஸ்.கே பிரசாத் பேட்டி

என்னை பொறுத்தவரை அவர் எல்லா போட்டிகளிலும் விளையாடலாம் இருந்தாலும் அந்த முடிவு அவரின் கையிலே உள்ளது. இந்தத் தொடரை பொறுத்தவரை இந்த இரண்டு பந்துவீச்சாளர்களின் பந்து வீச்சைக்கான நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் என பரத் அருண் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement