ரன் அவுட் மட்டும் பண்ணிடாத.. அன்டோல்ட் ஸ்டோரி படத்தின் டைலாக்கை வைத்து.. தோனியை பாராட்டிய சூரியகுமார்

Suryakumar yadav 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற்ற 30வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 20 ஓவரில் 167-7 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரிசப் பண்ட் 63, மிட்சேல் மார்ஷ் 30 ரன்கள் எடுத்தனர்.

சென்னைக்கு அதிகபட்சமாக ஜடேஜா, பதிரனா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அடுத்ததாக சேசிங் செய்த சென்னை அணிக்கு துவக்க வீரர்கள் ரச்சின் ரவீந்திரா 37, சாய்க் ரசித் 27 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தனர். ஆனாலும் மிடில் ஆர்டரில் ராகுல் திரிபாதி 9, ஜடேஜா 7, விஜய் சங்கர் 9 ரன்னில் அவுட்டானதால் சரிந்த சென்னை மீண்டும் தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

உண்மையான வசனம்:

ஆனால் அப்போது சிவம் துபே நிதானமாக விளையாடி 43* (37) ரன்கள் அடித்து அசத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டிய கேப்டன் தோனி 26* (11) ரன்கள் எடுத்தார். அதனால் 19.3 ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்த சென்னை 5 தொடர் தோல்விகளை நிறுத்தி 2வது வெற்றியைப் பெற்றது. லக்னோவுக்கு அதிகபட்சமாக ரவி பிஸ்னோய் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

இந்நிலையில் அந்தப் போட்டியில் அழுத்தமான நேரத்தில் சிவம் துபே மற்றும் தோனி ஆகியோர் விளையாடிய தருணத்தை வைத்து சூரியகுமார் யாதவ் பாராட்டு தெரிவித்துள்ளார். இது பற்றி தம்முடைய இன்ஸ்டாகிராமில் சூரியகுமார் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.
“மஹி பாய்: உனக்கு ஸ்ட்ரைக்கை கொடுத்தால் நீ போட்டியை வெல்வாயா?
துபே: நான் முயற்சி செய்கிறேன்”

- Advertisement -

சூரியகுமார் பாராட்டு:

“மஹி பாய்: அப்படியானால் நானும் முயற்சி செய்கிறேன். என்னை நீ ரன் அவுட் மட்டும் செய்து விடாதே” என்று தோனி – துபே பேசுவது போல புகைப்படத்துடன் சேர்த்து எழுதி பதிவிட்டுள்ளார்.
சொல்லப்போனால் இந்த வசனம் எம்எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தில் ஒரு காட்சியில் தோனி சக வீரரிடம் சொல்லக்கூடிய வசனமாகும்.

இதையும் படிங்க: பயந்தா வேலையாகாது.. அது கிடைச்சா அடிச்சாகனும்.. அஸ்வின் மேலே பிரஷர் போட்டுட்டோம்.. சிஎஸ்கேவுக்கு தோனி கட்டளை

அதே வசனத்தைப் பயன்படுத்தி சூரியகுமார் தல தோனியை பாராட்டியுள்ளார். அந்த வகையில் 43 வயதிலும் சிறப்பாக விளையாடிய தோனி இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்று தன்னை கிண்டலடித்தவர்களின் முகத்தில் கரியைப் பூசியுள்ளார். இங்கிருந்து சென்னை அணி தொடர்ந்து வெற்றிகளை பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற போராட உள்ளது.

Advertisement