- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs WI : கிறிஸ் கெயில் சாதனை சமன் – விராட், ரோஹித்தை முந்திய சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் 2 சரித்திர சாதனை

வெஸ்ட் இண்டீஸ் எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா 3வது போட்டியில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாத நிலைமையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கியுள்ள இந்தியாவை 2016க்குப்பின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து தோற்கடித்து முன்னிலை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் ஆகஸ்ட் 8ஆம் தேதி கயானாவில் நடைபெற்ற 3வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 159/5 ரன்கள் சேர்த்தது.

அதிகபட்சமாக ப்ரெண்டன் கிங் 42 (42) ரன்களும் கேப்டன் ரோவ்மன் போவல் 40* (19) ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்களை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 160 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு அறிமுக போட்டியில் ஜெய்ஸ்வால் 1, சுப்மன் கில் 6 என தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் 3வது இடத்தில் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரத்தில் சூரியகுமார் யாதவ் இந்த தொடரில் முதல் முறையாக விஸ்வரூபம் எடுத்து அதிரடியாக விளையாடி 83 (44) ரன்களை விளாசி வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

சூர்யகுமாரின் சாதனைகள்:
அவருடன் திலக் வர்மா தனது பங்கிற்கு 49* (37) ரன்களும் கேப்டன் பாண்டியா 20* (15) ரன்களும் எடுத்ததால் 17.5 ஓவரிலேயே 164/3 ரன்கள் எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் 10 பவுண்டரி 4 சிக்சருடன் 83 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

தாமதமாக 30 வயதில் அறிமுகமாகி ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டி20 கிரிக்கெட்டில் பெரும்பாலான போட்டிகளில் எதிரணி எப்படி பந்து வீசினாலும் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் மைதானத்தின் நாலாபுறங்களிலும் அடித்து நொறுக்கும் ஸ்டைலை கொண்ட அவர் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரை மிஞ்சி லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அவதரித்துள்ளார்.

- Advertisement -

அந்த வரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்து 2016க்குப்பின் வெஸ்ட் இண்டீஸ் எதிராக ஒரு டி20 தொடரில் சந்திக்கும் தோல்வியிலிருந்தும் இந்தியாவை காப்பாற்றிய அவர் இப்போட்டியில் அடித்த 4 சிக்ஸர்களையும் சேர்த்து 100 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

1. இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்களை அடித்த 3வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள அவர் அதிவேகமாக 100 சிக்சர்கள் அடித்த இந்தியர் என்ற ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரது சாதனைகளை இரு மடங்கு வேகத்தில் உடைத்து புதிய சரித்திரம் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சூரியகுமார் யாதவ் : 49 இன்னிங்ஸ்*
2. ரோகித் சர்மா : 84 இன்னிங்ஸ்
3. விராட் கோலி : 96 இன்னிங்ஸ்

- Advertisement -

2. மேலும் உலக அளவில் சர்வதேச கிரிக்கெட்டில் வேகமாக 100 சிக்ஸர்களை அடித்த 2வது வீரர் என்ற ஜாம்பவான் கிறிஸ் கெயில் சாதனையும் அவர் சமன் செய்துள்ளார். அந்த பட்டியல்:
1. எவின் லெவிஸ் : 48 இன்னிங்ஸ்
2. கிறிஸ் கெயில்/சூரியகுமார் யாதவ் : தலா 49 இன்னிங்ஸ்
3. கோலின் முண்ரோ : 57 இன்னிங்ஸ்

3. அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அந்த அணிக்கு எதிராக அதிகபட்ச டி20 ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற தன்னுடைய சொந்த சாதனையையே அவர் முறியடித்துள்ளார். அந்த பட்டியல்:
1. சூரியகுமார் யாதவ் : 83, 2023*
2. சூரியகுமார் யாதவ் : 76, 2022
3. ரிஷப் பண்ட் : 65*, 2019

இதையும் படிங்க:IND vs WI : நாங்க பண்ண இந்த சின்ன தப்பு தான் எங்களது தோல்விக்கு காரணமாக மாறிடுச்சு – ராவ்மன் பவல் வருத்தம்

4. அது போக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அந்த அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் 2 அரை சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார். அவரை தவிர்த்து ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், திலக் வர்மா ஆகியோர் தலா 1 அரை சதம் மட்டுமே அடித்துள்ளனர்.

- Advertisement -