IND vs WI : நாங்க பண்ண இந்த சின்ன தப்பு தான் எங்களது தோல்விக்கு காரணமாக மாறிடுச்சு – ராவ்மன் பவல் வருத்தம்

Rovman-Powell-1
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற தலைப்பில் முன்னிலை வகித்திருந்த வேளையில் அந்த அணியானது நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் தோல்வியை சந்தித்ததன் மூலம் இந்த தொடரில் தங்களது முதல் தோல்வியை பதிவு செய்துள்ளது.

அதோடு தற்போது இந்த தொடரானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இருக்கிறது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்னர் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 17.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 164 எங்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 83 ரன்களை குவித்து அசத்தினார்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ராவ்மன் பவல் கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக அடித்து விட்டதாக நினைக்கிறேன். இருந்தாலும் பேட்டிங் துறையில் எங்களது அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

- Advertisement -

குறிப்பாக இது போன்ற துவக்கத்தை தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். பூரானுக்கு முன்னதாக சார்லஸ்க்கு வாய்ப்பு வழங்கப்படும் வழங்க வேண்டும் என்பதற்காகவே அவரை மூன்றாவது இடத்தில் களமிறங்கினோம். பூரான் தற்போது இருக்கும் பார்மில் அவரால் எப்படி பேட்டிங் செய்ய முடியும் என்பதை இந்த தொடரில் வெளிகாட்டி வருகிறார்.

இதையும் படிங்க : IND vs WI : ரசித் கான், ஹஸரங்காவை மிஞ்சிய குல்தீப் யாதவ் – சஹால் சாதனையை தகர்த்து டி20 கிரிக்கெட்டில் புதிய ஆல் டைம் சாதனை

நாங்கள் இந்த போட்டியில் பந்து வீச்சின் போது கூடுதலான வேகத்தை கொடுத்து விட்டோம். அது இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகிவிட்டது. இன்னும் சில நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்த போட்டிகள் வருவதால் நிச்சயம் நல்ல திட்டங்களுடன் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புவோம் என ராவ்மன் பவுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement