வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் 2016க்குப்பின் முதல் முறையாக அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா ஆரம்பத்திலேயே பின்தங்கியது. அந்த நிலைமையில் இத்தொடரை வெல்ல ஆகஸ்ட் 8ஆம் தேதி கயானாவில் நடைபெற்ற 3வது போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 159/5 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக கேப்டன் ரோவ்மன் போவல் 40* (19) ரன்களும் ப்ரெண்டன் கிங் 42 (42) ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 160 ரன்கள் துரத்திய இந்தியாவுக்கு அறிமுகப் போட்டியில் ஜெய்ஸ்வால் 1, சுப்மன் கில் 6 என தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் இந்த தொடரில் முதல் முறையாக தமக்கே உரித்தான பாணியில் அதிரடியாக விளையாடி வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார்.
குல்தீப் யாதாவின் சாதனை:
அந்த வகையில் 14 ஓவர்கள் வரை நிலைத்து நின்று அதிரடி காட்டிய அவர் 10 பவுண்டரி 4 சிக்சருடன் அரை சதமடித்து 83 (43) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்த ஆட்டமிழந்தார். அவருடன் தனது பங்கிற்கு சிறப்பாக செயல்பட்ட திலக் வர்மா 49* (37) ரன்கள் எடுக்க கடைசியில் கேப்டன் பாண்டியா 20 ரன்கள் எடுத்ததால் 17.5 ஓவரிலேயே 164/3 ரன்களை எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று வாழ்வா – சாவா போட்டியில் வாழ்வைக் கண்டு தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்து தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அன்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் 1 விக்கெட் எடுத்து சிறப்பாக செயல்பட்ட குல்தீப் யாதவ் 2வது போட்டியில் போராடிய சஹாலுக்கு ஜோடி விளையாட முடியாமல் காயத்தால் வெளியேறியது இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்தது. இருப்பினும் இந்த போட்டியில் காயத்திலிருந்து குணமடைந்து களமிறங்கிய அவர் 4 ஓவரில் 28 ரன்களை மட்டும் கொடுத்து ப்ரெண்டன் கிங் 42, ஜான்சன் சார்லஸ் 12, நிக்கோலஸ் பூரான் 20 என 3 காட்டடி வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை குறைந்த ரன்களுக்கு எடுத்து மிகச் சிறப்பாக பந்து வீசினார்.
கடந்த 2017ஆம் ஆண்டு இதே வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் இந்த 3 விக்கெட்டுகளையும் சேர்த்து மொத்தமாக 29 இன்னிங்ஸில் 50 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வந்து வீச்சாளர் என்ற சாஹலின் ஆல் டைம் சாதனையை தகர்த்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. குல்தீப் யாதவ் : 29 இன்னிங்ஸ்*
2. யுஸ்வேந்திர சஹால் : 34 இன்னிங்ஸ்
3. ஜஸ்பிரித் பும்ரா : 41 இன்னிங்ஸ்
4. ரவிச்சந்திரன் அஸ்வின் : 42 இன்னிங்ஸ்
5. புவனேஸ்வர் குமார் : 50 இன்னிங்ஸ்
அதே போல பந்துகள் அடிப்படையிலும் டி20 கிரிக்கெட்டில் வேகமாக 50 விக்கெட்களை எடுத்த இந்தியராகவும் அவர் சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. குல்தீப் யாதவ் : 638*
2. யுஸ்வேந்திர சஹால் : 800
3. ஜஸ்பிரித் பும்ரா : 894
இதையும் படிங்க:இந்தியனா சொல்றேன், அந்த பிரச்சனையை சரி செய்யலன்னா 2023 உ.கோ ஜெயிக்க முடியாது – யுவ்ராஜ் சிங் கவலை
அதை விட உலக அளவிலான பட்டியலில் ஆப்கானிஸ்தானின் ரசித் கான் இலங்கையின் ஹஸரங்கா ஆகியோரை மிஞ்சியுள்ள அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்கள் எடுத்த 2வது பவுலர் என்ற சாதனையும் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. அஜந்தா மெண்டிஸ் (இலங்கை) : 26 இன்னிங்ஸ்
2. குல்தீப் யாதவ் (இந்தியா) : 29 இன்னிங்ஸ்*
3. வணிந்து ஹஸரங்கா (இலங்கை) : 30 இன்னிங்ஸ்
4. இம்ரான் தாகிர் (தென் ஆப்பிரிக்கா) – ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) : தலா 31 இன்னிங்ஸ்
5. லுங்கி நிகிடி (
தென்னாபிரிக்கா) : 32 இன்னிங்ஸ்