சதமடிப்பதற்காக இப்படியா சுயநலமா இருப்பீங்க? செஞ்சுரி அடித்தும் சூரியகுமார் யாதவை – விளாசும் ரசிகர்கள் (நடந்தது என்ன?)

SKY-and-Jitesh
- Advertisement -

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி சார்பாக விளையாடிய கேப்டன் சூரியகுமார் யாதவ் 56 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் என 100 ரன்கள் குவித்து சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் தனது நான்காவது சதத்தை பூர்த்தி செய்து ஆட்டமிழந்தார். அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் ஏகப்பட்ட சாதனைகளை அவர் படைத்திருந்தாலும் இந்த போட்டியில் சதம் அடிப்பதற்காக சூரியகுமார் யாதவ் சுயநலமாக செயல்பட்டதாக ரசிகர்கள் சில விமர்சனங்களை அவர் மீது எழுப்பி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி ஆரம்பத்திலேயே சுப்மன் கில் மற்றும் திலக் வர்மா ஆகியோரது விக்கெட்டை அடுத்தடுத்து இழந்தது. ஆனாலும் ஜெய்ஸ்வால் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக இந்தியா அணி நல்ல நிலையை எட்டியது.

- Advertisement -

ஒரு கட்டத்தில் ஜெயிஸ்வால் 60 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினாலும் மிகச் சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் சதத்தை நோக்கி வேகமாக முன்னேறினார். அந்த நேரத்தில் சூரியகுமார் யாதவ் செய்த செயல் தான் தற்போது பெரிய அளவில் கேள்விகளை எழுப்பி உள்ளது. அதாவது போட்டியின் கடைசி ஓவருக்கு முன்னதாக 19-வது ஓவரில் சூரியகுமார் யாதவ் 98 ரன்கள் அடித்திருந்தார்.

அப்போது அந்த 19-ஆவது ஓவரின் கடைசி பந்தினை விளையாடிய ஜிதேஷ் சர்மா தட்டிவிட்டு ஒரு ரன் ஓட முயன்றார். ஆனால் எதிரில் நின்ற சூரியகுமார் யாதவ் ரன் ஓட வேண்டாம் என்று அவரை தடுத்து நிறுத்தினார். அதற்கு காரணம் யாதெனில் : அந்த சிங்கிளை அவர் ஓடாமல் இருந்தால் தான் அடுத்த 20 ஆவது ஓவரின் முதல் பந்தை சந்திக்க முடியும் என்பதற்காகவே சூரியகுமார் யாதவ் அந்த சிங்கிளை தவித்தார் என்று ரசிகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

- Advertisement -

அதோடு ஜிதேஷ் சர்மா அணியில் ஒரு ஃபினிஷராகவே இடம் பிடித்துள்ளார். இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடுபவர் என்பதனாலே வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ள அவர் அழைத்தால் நிச்சயம் சூரிய குமாருக்கு ஓடி வந்திருக்க வேண்டும். ஆனால் சூரியகுமார் அந்த அழைப்பை மறுத்தது ஏன்? என்ற கேள்வியும் எழுப்பி உள்ளனர்.

இதையும் படிங்க : 10 வயசு குழந்தைங்க கூட இப்படி விளையாட மாட்டாங்க.. பாகிஸ்தான் அணியை விமர்சித்த மார்க் வாக்

இருப்பினும் அந்த கடைசி ஓவரின் முதல் பந்தில் இரண்டு ரன்கள் அடித்த சூரியகுமார் யாதவ் 100 ரன்களை பூர்த்தி செய்து பின்னர் அடுத்த பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரது இந்த சதத்திற்காகவே சுயநலமாக அந்த சிங்கிளை ஓட அவர் மறுத்ததாகவும் ரசிகர்கள் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி தங்களது விமர்சனங்களை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 201 ரன்களை குவிக்க பின்னர் தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 95 ரன்களை மட்டுமே குவித்ததால் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement