10 வயசு குழந்தைங்க கூட இப்படி விளையாட மாட்டாங்க.. பாகிஸ்தான் அணியை விமர்சித்த மார்க் வாக்

Mark Waugh
- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 14ஆம் தேதி பெர்த் நகரில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 487 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக தன்னுடைய கடைசி டெஸ்ட் தொடரில் விளையாடும் டேவிட் வார்னர் சதமடித்து 164, மிட்சேல் மார்ஷ் 90 ரன்கள் குவித்தனர்.

பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அறிமுக வீரர் அமீர் ஜமால் 6, குர்ரம் சேஷாத் 2 விக்கெட்களை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் பாகிஸ்தான் 2வது நாள் முடிவில் 132/2 ரன்கள் எடுத்து இன்னும் 335 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது. அந்த அணிக்கு அப்துல்லா ஷபிக் 42, ஷான் மசூட் 30 ரன்களில் அவுட்டான நிலையில் களத்தில் இமாம் 38*, குர்ராம் சேஷாத் 7* ரன்களுடன் உள்ளனர்.

- Advertisement -

சுமாரான ஃபீல்டிங்:
முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவுக்கு நிதானமாக விளையாடிய உஸ்மான் கவாஜா 21 ரன்களில் இருந்த போது ஃபுல் ஷாட் அடிக்க முயற்சித்து டாப் எட்ஜ் கொடுத்தார். அப்போது மேலே நோக்கி என்ற பந்தை ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த அப்துல்லா சபிக் பிடிப்பதற்காக சென்றார். ஆனால் கடைசியில் பந்தை கோட்டை விட்ட அவர் கேட்ச்சை தவற விட்டது மட்டுமல்லாமல் பவுண்டரியையும் கொடுத்தார்.

அது போக 164 ரன்கள் விளாசிய வார்னர் 104 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை மற்றொரு பாகிஸ்தான் வீரர் குர்ரம் ஷேசாத் தவற விட்டு ஆஸ்திரேலியா எக்ஸ்ட்ரா 60 ரன்கள் அடிப்பதற்க்கு முக்கிய காரணமாக அமைந்தார். அந்த வகையில் இந்த போட்டியில் முதல் நாளிலேயே புத்துணர்ச்சியுடன் களமிறங்கியும் அந்த கேட்ச்களை பிடித்திருந்தால் ஆஸ்திரேலியாவை 400 ரன்களுக்கு முன்னதாகவே பாகிஸ்தானால் மடக்கியிருக்க முடியும் என்றே சொல்லலாம்.

- Advertisement -

இந்நிலையில் அண்டர்-10 அளவில் விளையாடும் குழந்தைகளை விட இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் பீல்டிங் மோசமாக இருந்ததாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மார்க் வாக் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் விமர்சித்தது பின்வருமாறு. “அண்டர்-10 உட்பட எந்த வகையான கிரிக்கெட்டிலும் அது பிடிக்கப்பட வேண்டிய மிகவும் எளிமையான கேட்ச். ஆனால் தன்னுடைய கேரியரில் முதல் முறையாக கேட்ச் பிடிக்க முயன்றது போல அந்த இடத்தில் ஷபிக் செயல்பட்டார்”

இதையும் படிங்க:  ஜெய்ஸ்வால் செய்த தவறால் ஆட்டமிழந்த சுப்மன் கில். அதிருப்தியை வெளிப்படுத்திய கோச் டிராவிட் – நடந்தது என்ன?

“ஆஸ்திரேலியாவுக்கு மட்டுமல்லாமல் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் எதிராக நீங்கள் இப்படி செய்யக்கூடாது” என்று கூறினார். இதை தொடர்ந்து 1995க்குப்பின் ஆஸ்திரேலியா மண்ணில் தொடர்ந்து சந்தித்து வரும் தோல்விகளை இந்த போட்டியில் வென்று நிறுத்தும் முனைப்புடன் பாகிஸ்தான் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement