- Advertisement -
இந்திய கிரிக்கெட்

திலக் வர்மா அந்த இடத்திலும், நான் இந்த இடத்திலும் விளையாடுவோம்.. அதுதான் பிளான் – சூரியகுமார் யாதவ் கருத்து

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து அடுத்ததாக நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அடுத்த மாதம் பங்கேற்று விளையாட இருக்கிறது.

திலக் வர்மா 3 ஆம் இடத்தில் ஆடுவார் : சூரியகுமார் யாதவ்

அதற்கு முன்னதாக அடுத்த ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடரின் 15 பேர் கொண்ட இந்திய அணியானது பி.சி.சி.ஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் சூர்யகுமார் யாதவே கேப்டனாகவே நீடிக்கிறார். ஆனால் துணை கேப்டனான சுப்மன் கில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

மோசமான பேட்டிங் பார்ம் காரணமாக அவர் நீக்கப்பட்ட வேளையில் கேப்டன் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் பார்ம் மீதும் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன. ஏனெனில் சமீபகாலமாகவே அவர் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டாலும் ஒரு பேட்ஸ்மேனாக மோசமான பார்மில் இருந்து வருகிறார்.

எனவே அவர் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் எந்த பேட்டிங் ஆர்டரில் களமிறங்கி விளையாடுவார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரில் தான் நான்காம் இடத்தில் விளையாடுவேன் என்றும் மூன்றாம் இடத்தில் திலக் வர்மா தொடர்ந்து விளையாடுவார் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : தற்போது முடிந்த தென்னாப்பிரிக்க தொடர் வரை திலக் வர்மா மூன்றாம் இடத்தில் களமிறங்கி சிறப்பாக விளையாடி வருவதால் அவரே தொடர்ந்து அந்த இடத்தில் விளையாடுவார். நான் வழக்கமாக விளையாடும் மூன்றாம் இடத்தை தாண்டி நான்காவது இடத்திலே தான் விளையாட இருக்கின்றேன்.

இதையும் படிங்க : சாம்சனுடன் அந்த 2 பேரும் கதவை உடைச்சுகிட்டு டி20 உ.கோ டீம்ல கம்பேக் கொடுத்துருக்காங்க.. டிகே பாராட்டு

அதேபோன்று மிடில் ஆர்டரில் ஹார்டிக் பாண்டியாவும், ஷிவம் துபேவும் இருப்பதனால் எங்களுடைய பேட்டிங் ஆர்டர் பலம் அதிகரிக்கிறது என சூர்யகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது. இதான் காரணமாக எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் திலக் வர்மா தான் மூன்றாவது இடத்தில் விளையாடுவார் என்றும் சூரியகுமார் யாதவ் நான்காவது இடத்தில் விளையாடுவார் என்பதும் உறுதியாகியுள்ளது.

- Advertisement -