- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2 ஆவது இந்திய வீரராகவும், 2 ஆவது அதிவேக வீரராகவும் சூரியகுமார் யாதவ் – நிகழ்த்திய சாதனை

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று கான்பெர்ரா நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஏற்கனவே ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் உச்சத்தில் இருந்தது.

சூரியகுமார் யாதவ் நிகழ்த்திய சாதனை :

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது துவக்க ஓவர்களில் இருந்தே அதிரடியாக விளையாடி 9.4 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 97 ரன்கள் எடுத்திருந்த வேளையில் மழை குறுக்கிட்டதால் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சுப்மன் கில் 37 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 39 ரன்களையும் குவித்து அசத்தியிருந்தனர். இந்த போட்டியின் போது 24 பந்துகளை சந்தித்த சூரியகுமார் யாதவ் மூன்று பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 39 ரன்கள் குவித்து அமர்க்களமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

ஒருவேளை போட்டி முழுவதுமாக நடைபெற்றிருந்தால் அவர் பெரிய ரன் குவிப்பிலும் ஈடுபட்டிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். இந்நிலையில் அவர் இந்த போட்டியில் அடித்த இரண்டு சிக்ஸர்களின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :

- Advertisement -

நேற்றைய போட்டியில் அவர் அடித்த இரண்டு சிக்ஸர்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக சர்வதேச டி20 போட்டிகளில் 150 சிக்ஸர்களை பூர்த்தி செய்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். இவருக்கு முன்னதாக ரோகித் சர்மா 205 சிக்ஸர்களை அடித்திருக்கும் வேளையில் தற்போது சூரியகுமார் யாதவ் 150 சிக்சர்களை பூர்த்தி செய்துள்ளார்.

இதையும் படிங்க : 5 ஆவது இந்திய வீரராக முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ

மேலும் மற்றொரு சாதனையாக சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 150 சிக்ஸர்களை அடித்த சர்வதேச வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் முகமது வாசிமிற்கு (66 இன்னிங்ஸ்) அடுத்து இரண்டாவது இடத்தினை சூரியகுமார் யாதவ் (86 இன்னிங்ஸ்) பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -