ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றி அசத்தியது. இருந்தாலும் இந்த தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதினை வென்றதன் மூலம் தன் மீது இருந்த விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.
சாதனை நிகழ்த்திய ரோஹித் சர்மா :
தற்போது 38 வயதான ரோஹித் சர்மா அடுத்த 2027 50 ஓவர் உலக கோப்பை தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்வி அதிகரித்து இருந்த வேளையில் ஆஸ்திரேலிய தொடரில் அவரது செயல்பாடு எவ்வாறு இருக்கப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்திருந்தது.
அந்த வகையில் ஆஸ்திரேலியா தொடரின் முதல் போட்டியில் 8 ரன்கள் மட்டுமே அடித்து ரோஹித் சர்மா ஏமாற்றத்தை அளித்திருந்தார். ஆனாலும் இரண்டாவது போட்டியின் போது 73 ரன்களை அடித்த அவர் மூன்றாவது போட்டியின் போது 125 பந்துகளில் 121 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்று அசத்தியிருந்தார்.
அவரது இந்த சிறப்பான செயல்பாடு அனைவரது மத்தியிலும் இருந்த விமர்சனங்களை முறியடித்தது. இந்நிலையில் தற்போது ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் சுப்மன் கில்லை பின்னுக்கு தள்ளி 781 புள்ளிகள் பெற்று ரோகித் சர்மா முதலிடத்தில் முன்னேறியுள்ளார்.
அதிலும் குறிப்பாக ஐந்தாவது இந்திய வீரராக ரோஹித் சர்மா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு முன்னதாக ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்த வீரர்களாக சச்சின், தோனி, கோலி, கில் ஆகியோர் இருந்த வேளையில் தற்போது ஐந்தாவது இந்திய வீரராக ரோஹித் சர்மா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : சூரியகுமாருக்கு இந்த 2 தான் கரெக்ட்.. அதுக்கு கிழே போனா ரன்ஸ் அடிக்க முடியாது.. உத்தப்பா அட்வைஸ்
அதுமட்டும் இன்றி அதிக வயதில் ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 பேட்ஸ்மேன் என்ற இடத்தையும் அவர் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடி முடித்துள்ள அவர் அடுத்ததாக தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.



