சூரியகுமாருக்கு இந்த 2 தான் கரெக்ட்.. அதுக்கு கிழே போனா ரன்ஸ் அடிக்க முடியாது.. உத்தப்பா அட்வைஸ்

Robin Uthappa
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் விளையாடும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் அக்டோபர் 29ஆம் தேதி கான்பெராவில் துவங்கியது. அத்தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 9.4 ஓவரில் 97/1 ரன்கள் எடுத்த போது மழை வந்ததால் போட்டி ரத்தானாது.

இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா 19 (14) ரன்னில் அவுட்டானார். அவருடன் இணைந்து விளையாடிய சுப்மன் கில் 37* (20) ரன்களும் கேப்டன் சூரியகுமார் யாதவ் 39* (24) ரன்களும் எடுத்த போது மழை வந்ததால் போட்டி கைவிடப்பட்டது. முன்னதாக கேப்டனாக பொறுப்பேற்றது முதல் சூரியகுமார் யாதவ் பெரியளவில் ரன்கள் குவிக்க தடுமாறி வந்தார்.

- Advertisement -

பொருத்தமான 3, 4வது இடங்கள்:

அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் 3 பவுண்டரி 2 சிக்சர்களை அடித்த அவர் ஃபார்முக்கு திரும்பியதைப் போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் சூரியகுமார் யாதவ் பேட்டிங்கில் 3 அல்லது 4வது இடத்திற்கு கீழே களமிறங்கக்கூடாது என்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். அதற்கு கீழே களமிறங்கினால் அவரால் பெரிய ரன்கள் குவிக்க முடியாது என்றும் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

கேப்டனாக பொறுபேற்றது முதல் சூரியகுமார் 3, 4, 5, 6, 7 ஆகிய பல்வேறு இடங்களில் களமிறங்கி வருகிறார். அவ்வாறு செய்யக்கூடாது என்று அறிவுறுத்தும் உத்தப்பா இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது நீங்கள் பாறை மற்றும் கடினமான இடத்தில் சிக்கிக் கொண்டதைப் போன்ற நிலைமையாகும். ஏனெனில் இது உங்களுடைய சொந்த ஆட்டம் மற்றும் கேப்டன்ஷிப் ஆகிய 2 வேலையும் பார்க்க வேண்டிய முடிவாகும்”

- Advertisement -

உத்தப்பா அட்வைஸ்:

“எனவே இது பற்றிய முடிவை எடுப்பது கடினமானது. இருப்பினும் சூரியகுமார் ஏதேனும் ஒரு இடத்தில் விளையாட வேண்டும் என்று நான் கருதுகிறேன். என்னுடைய கருத்துப்படி டி20 கிரிக்கெட்டில் அவருக்கு 3வது இடத்தை விட வேறு சிறந்த இடம் இருக்க முடியாது. ஒருவேளை டாப் 3 பேட்ஸ்மேன்கள் செட்டாகி விட்டால் அதன் பின் நீங்கள் வளைவுத்தன்மையை கொண்டு வரலாம்”

இதையும் படிங்க: ஐசிசி மகளிர் உ.கோ: ஆஸியுடன் இந்தியாவின் குறுக்கே மழை.. போட்டி ரத்தானால் ஃபைனல் செல்வது யார்?

“இதை அவர்கள் ஆசியக் கோப்பையில் முடிவெடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதாவது ஓப்பனிங்கில் இடது கை பேட்ஸ்மேன் அவுட்டானால் சூரியகுமாரும் வலது கை பேட்ஸ்மேன் அவுட்டானால் திலக் வர்மாவும் களமிறங்கலாம் என்று முடிவெடுத்துள்ளார்கள். அது சரியானது என்றாலும் சூரியகுமார் 4வது இடத்திற்கு கீழே களமிறங்கக்கூடாது. ஏனெனில் அவரைப் போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் 4வது இடத்திற்கு கீழே களமிறங்கினால் நிறைய தவறு செய்ய வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

Advertisement