லண்டன் விஸ்டன் விருதுகள் : மிகப்பெரிய கெளரவத்தை பெற்ற சூரியகுமார் யாதவ் – வரலாறு படைத்த ஹர்மன்ப்ரீத் கௌர்

Harmanpreet kaur
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு வருடமும் ஐசிசி வழங்கும் விருதுகள் உலகிலேயே மிகவும் உயரியதாக கருதப்படுகிறது. அதே போல லண்டனில் இருக்கும் நூற்றாண்டு பழமை வாய்ந்த பிரபலமான விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனக் பத்திரிக்கை நிறுவனம் வழங்கும் விருதுகளும் அதற்கு நிகரானதாக போற்றப்படுகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு விஸ்டன் பத்திரிக்கை பாராட்டி கௌரவித்துள்ளது.

அந்த விருது பட்டியலில் உச்சகட்ட விருதாக பார்க்கப்படும் 2023ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட்டர்ஸ் விருது 4 வீரர்கள் மற்றும் ஒரு வீராங்கனைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகளிர் கிரிக்கெட்டில் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு கேப்டனாகவும் இந்தியாவை வழி நடத்தி வரும் ஹர்மன்பிரித் கௌர் 2023ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட்டர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீப காலங்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் 2017 மகளிர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 143* ரன்களை விளாசி இந்தியாவை ஃபைனலுக்கு அழைத்துச் சென்றது யாராலும் மறக்க முடியாது.

- Advertisement -

விஸ்டன் விருதுகள்:
அதே போல கடந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவரது தலைமையில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 3 – 0 என்ற கணக்கில் ஒய்ட்வாஷ் வெற்றி பதிவு செய்து கோப்பையை வென்றது. அதன் வாயிலாக 1999க்குப்பின் 21 வருடங்கள் கழித்து முதல் முறையாக இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த இந்திய மகளிர் அணி ஒருநாள் தொடரில் வென்று சாதனை படைத்தது.

அடுத்த சில வாரங்களிலேயே அதே இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் மீண்டும் இந்தியாவை சிறப்பாக வழி நடத்திய அவர் ஃபைனல் வரை அழைத்துச் சென்று வெள்ளி பதக்கம் வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அந்த அடுத்தடுத்த மிகச்சிறந்த செயல்பாடுகளால் இந்த கௌரவத்தை ஹர்மன்ப்ரீத் கௌர் பெறுவதாக விஸ்டன் பாராட்டியுள்ளது. இதன் வாயிலாக விஸ்டன் விருதை வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையும் அவர் படைத்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் ஜூலன் கோஸ்வாமி, மிதாலி ராஜ் போன்ற ஜாம்பவான் வீராங்கனைகள் கூட இந்த விருதை வென்றதில்லை. அவருடன் இங்கிலாந்தைச் சேர்ந்த பென் போக்ஸ், மேத்தியூ போட்ஸ் மற்றும் நியூசிலாந்தின் டாம் ப்ளண்டல், டார்ல் மிட்சேல் ஆகியோரும் 2023ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட்டர்ஸ் கௌரவத்தை பெற்றுள்ளனர்.

அதே போல் 2022ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் சரவெடியாக செயல்பட்டு 2 சதங்கள் 9 அரை சதங்கள் உட்பட 1164 ரன்களை 46.56 என்ற சராசரியில் 187.43 என்ற தெறிக்க விடும் ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து குறுகிய காலத்திலேயே உலக நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும் முன்னேறியுள்ள சூரியகுமார் யாதவுக்கு உலகின் சிறந்த டி20 கிரிக்கெட்டர் என்ற விருதை விஸ்டன் அறிவித்துள்ளது.

- Advertisement -

குறிப்பாக 360 டிகிரியிலும் எப்படி பந்து வீசினாலும் அடிக்கும் அவருக்கு இந்த சிறப்பான விருது கிடைத்துள்ளது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அது போக உலகின் முன்னணி கிரிக்கெட்டர் என்ற மற்றொரு உச்சகட்ட விருதை இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் வென்றுள்ளார். இதற்கு முன் அந்த விருதை அதிகபட்சமாக இந்தியாவின் நம்பிக்கை நாயகன் விராட் கோலி 3 முறை வென்றிருந்தார்.

இதையும் படிங்க:SRH vs MI : புதிய மைல்கல் தொட்ட ஹிட்மேன் ரோஹித் சர்மா – அதிரடி பேட்டிங் செய்து பெரிய ஸ்கோர் குவித்த மும்பை

தற்போது 3வது முறையாக அந்த விருதை வென்றுள்ள பென் ஸ்டோக்ஸ் விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார். அதே போல ஆஸ்திரேலியாவுக்கு உலக கோப்பை மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று கொடுத்த கேப்டன் பெத் மூனி உலகின் முன்னணி கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்றுள்ளார். மேலும் விஸ்டன் ட்ராபி விருதை இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ வென்று அசத்தியுள்ளார்.

Advertisement