- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அந்த அதிர்ஷ்டம் ஹெல்ப் பண்ணுச்சு.. இந்த பிராண்ட் தான் இந்திய அணியின் வாருங்காலம்.. சூரியகுமார் பேட்டி

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஜூலை 28ஆம் தேதி பல்லகேல் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவரில் 161/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குசால் பெரேரா 53, நிஷாங்கா 32 ரன்கள் எடுத்தனர்.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவி பிஸ்னோய் 3, அக்சர் படேல் 2, ஹர்திக் பாண்டியா 2, அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத் தொடர்ந்து இந்தியா பேட்டிங் செய்த போது மழை குறுக்கிட்டதால் 8 ஓவரில் 78 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு உருவாக்கப்பட்டது. அதைத் துரத்திய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 30 (15), சூரியகுமார் 26 (12), ஹர்திக் பாண்டியா 22* (9) ரன்களை அதிரடியாக எடுத்தனர்.

- Advertisement -

மழையின் உதவி:
அதனால் 6.3 ஓவரிலேயே 81/3 ரன்கள் எடுத்த இந்தியா எளிதாக வென்றது. அத்துடன் முதல் போட்டியில் வென்ற இந்தியா 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் புதிய கேப்டன் சூரியகுமார் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் முதல் தொடரிலேயே வெற்றி பெற்ற இந்தியா தங்களது பயணத்தை வெற்றிகரமாக துவங்கியது.

இந்நிலையில் இத்தொடர் துவங்குவதற்கு முன்பே அதிரடியாக விளையாட வேண்டும் என்ற தங்களுடைய அணுகுமுறையை இப்போட்டியிலும் கடை பிடித்ததாக இந்திய கேப்டன் சூரியகுமார் தெரிவித்துள்ளார். அத்துடன் மழை தங்களுக்கு உதவியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கிரிக்கெட்டின் எந்த வகையான பிராண்ட்டை விளையாட வேண்டும் என்பது பற்றி நாங்கள் தொடர் துவங்குவதற்கு முன்பே பேசினோம்”

- Advertisement -

“இலக்கு சிறியதாக இருந்தாலும் நாங்கள் இந்த டெம்ப்ளேட்டை பின்பற்றி தான் வருங்காலத்தை நோக்கி செல்ல விரும்புகிறோம். மழை பெய்வதற்கான சூழ்நிலை இருந்த நிலையில் 150 – 160 ரன்களுக்குள் சேசிங் செய்வது நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். இது போன்ற போட்டிகள் மிகவும் சாதுரியமாக இருப்பதை நாங்கள் பார்த்துள்ளோம். மழை எங்களுக்கு உதவியது”

இதையும் படிங்க: 24 பந்தில் 50.. வெ.இ அணியை ஓடவிட்ட பென் ஸ்டோக்ஸ் 43 வருட சாதனை.. இங்கிலாந்து உலக சாதனை சமன்

“எங்களுடைய பையன்கள் அற்புதமாக பேட்டிங் செய்தனர். அடுத்த போட்டியின் பிளேயிங் லெவனில் எந்த மாதிரியான வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை பற்றி நாங்கள் அமர்ந்து முடிவெடுக்க உள்ளோம். கொஞ்சம் அதிர்ஷ்டமும் உங்களை சுற்றி இருக்க வேண்டும். இப்போட்டியில் மழையின் வாயிலாக அதிர்ஷ்டம் எங்களுக்கு ஆசிர்வாதம் கொடுத்தது” என்று கூறினார்.

- Advertisement -