எல்லா மேட்ச்லயும் அவர் சூப்பர் ஹீரோ மாதிரி வந்து காப்பாத்த மாட்டாரு – செமி பைனலுக்கு முன்பாக இந்தியாவை எச்சரித்த ஓஜா

Pragyan Ojha
- Advertisement -

வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்று முடிந்து அரை இறுதி சுற்று துவங்குகிறது. அதில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து குரூப் 2 புள்ளி பட்டியல் முதலிடம் பிடித்ததால் நவம்பர் 10ஆம் தேதியன்று நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. அதில் சிறப்பாக செயல்பட்டு பைனலுக்கு செல்வதற்காக அப்போட்டி நடைபெறும் அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Suryakumar Yadav

- Advertisement -

முன்னதாக இந்த தொடரில் பேட்டிங் துறையில் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் அபாரமாக செயல்பட்டு இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றதில் கருப்பு குதிரையாக திகழ்தனர். அதிலும் குறிப்பாக விராட் கோலியே தடுமாறிய தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாவேவுக்கு எதிரான போட்டிகளில் வேறு ஏதோ பேட்டிங்க்கு சாதகமான பிட்ச்சில் விளையாடுவதை போல அட்டகாசமாக செயல்பட்ட சூரியகுமார் யாதவ் தனது சூப்பர்ஸ்டார் அணுகு முறையில் கொஞ்சமும் மாற்றத்தை செய்யாமல் களமறங்கிய முதல் பந்திலிருந்தே சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை குவித்தார்.

எச்சரிக்கும் ஓஜா:
அந்த வகையில் சூழ்நிலை எப்படியிருந்தாலும் எப்படி பந்து வீசினாலும் மைதானத்தின் நாலாபுறமும் சுழன்றடிக்கும் அவர் இந்த வருடம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1000* ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மெனாக சாதனை படைத்து உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மனாக ஜொலித்து வருகிறார். இந்நிலையில் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்ற அனைவராலும் போற்றப்படும் சூரியகுமார் யாதவ் அரையிறுதியில் தடுமாற வாய்ப்புள்ளதால் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் உட்பட டாப் ஆர்டர் நிச்சயமாக அதிக ரன்களை குவிக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் பிராகியன் ஓஜா எச்சரித்துள்ளார்.

Ind vs ZIm Suryakumar Yadav Sikander Raza

ஏனெனில் தற்போது சூப்பரான பார்மில் இருக்கும் சூரியகுமார் எப்படி செயல்படுகிறார் என்பதை வீடியோக்களின் வாயிலாக அலசி ஆராய்ந்து அவரை சாய்க்க எதிரணி திட்டம் தீட்டியிருக்கும் என்று கூறும் அவர் எல்லா நாட்களிலும் ஒருவரால் சூப்பர் ஹீரோ போல செயல்பட்டு காப்பாற்ற முடியாது என்று கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் அவர் மட்டும் 61* (25) ரன்களை எடுக்காமல் போயிருந்தால் இந்தியா 150 ரன்கள் கூட தொட்டிருக்காது என்ற நிதர்சனத்தையும் சுட்டிக்காட்டும் ஓஜா இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இது வரை நடந்தது முடிந்து போனது. வேண்டுமானால் அதற்காக மகிழ்ச்சியடையலாம். எனவே வருங்காலத்தில் பைனல் அல்லது செமி பைனலில் சிறப்பாக செயல்படுவதை பற்றி இந்தியா சிந்திக்க வேண்டும். ஏனெனில் இப்போது எதிரணிகள் சூரியகுமாரை தகர்க்க திட்டம் தீட்டியிருப்பார்கள். எதிரணிகள் தற்போது அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றன. அந்த வரிசையில் இங்கிலாந்தும் அவருக்கு எதிராக சிறப்பான திட்டங்களுடன் வரும். ஏனெனில் தேவையான போது அபாரமாக செயல்படும் வீரராக அவர் திகழ்கிறார்.

Ojha

“ஆனால் கடைசி போட்டியில் சூரியகுமார் மட்டும் அரை சதமடிக்காமல் போயிருந்தால் இந்தியா 150 ரன்கள் எடுத்திருக்காது. எனவே இந்தியாவின் அந்த பலவீனத்தை இந்நேரம் எதிரணிகள் குறித்து கொண்டிருக்கும். அதனால் தான் நாக் அவுட் சுற்றில் நீங்கள் எந்த தனிநபரையும் சார்ந்திருக்கக் கூடாது என்று நான் கூறுகிறேன். அதன் காரணமாக மொத்த டாப் ஆர்டர் வீரர்களும் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும். அரையிறுதியில் நிலவும் அதிகப்படியான அழுத்தத்தை அவர்கள் அனைவரும் சேர்ந்து சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் நமது அணிக்கு சூப்பர் ஹீரோ தேவையில்லை”

இதையும் படிங்க : INDvsENG : அரையிறுதியில் அசத்தப்போகும் இந்திய வீரர் இவர்தான். கோலி, சூர்யா இல்லை – முகமது கைப் கணிப்பு

“மாறாக அணியிலுள்ள 4 – 5 வீரர்களுமே அவர்களுக்குள் வேலையை பகிர்ந்து கொண்டு சூப்பர் ஹீரோக்களாக செயல்பட வேண்டும்” என்று கூறினார். அவர் கூறுவது போல கத்துக்குட்டி ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி போட்டியில் 15 ஓவர்களில் 107/4 என தடுமாறிய இந்தியாவை சூரியகுமார் யாதவ் தான் அதிரடியாக செயல்பட்டு இறுதியில் 20 ஓவர்களில் 186 ரன்கள் குவிக்க உதவினார். எனவே நாக் அவுட் போட்டியில் அனைவரும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்பது நிதர்சனம்.

Advertisement