MI vs GT : பர்ஸ்ட் பேட்டிங் பண்ணாலும் என்னோட மைன்ட் செட் இதுதான் – ஆட்டநாயகன் சூரியகுமார் யாதவ் பேட்டி

SKY-and-Rohit
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 57-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியானது மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 27 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்ததோடு புள்ளி பட்டியலிலும் மூன்றாவது இடத்தை பிடித்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

MI vs GT

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களை குவிக்க பின்னர் 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே குவித்ததால் 27 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை அணி பெற்ற வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் ஆறு சிக்சர் என 103 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்ததால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. பின்னர் போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய ஆட்டநாயகன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் :

SKY

டி20 கிரிக்கெட்டில் என்னுடைய சிறப்பான இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று என்று கூறலாம். எப்பொழுதுமே நான் ரன்களை குவிக்கும் போது என்னுடைய அணி வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவேன். அந்த வகையில் இந்த போட்டியிலும் எங்களது அணி வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த போட்டியில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்தாலும் கடந்த சில போட்டிகளாக சேசிங்கின் போது எவ்வாறு அதிரடியாக விளையாடி வருகிறோமோ அதே போன்று விளையாட வேண்டும் என்று நினைத்தோம்.

- Advertisement -

ஏனெனில் இரண்டாம் பாதியில் டியூ வரும் என்பது எங்களுக்கு தெரியும். எனவே நிச்சயம் சிறப்பாக விளையாடி பெரிய ரன் குவிப்பை வழங்க வேண்டும் என்று நினைத்தே அதிரடியாக விளையாடியதாக சூரியகுமார் யாதவ் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நான் நேராக அடிப்பதில் அதிக கவனம் செலுத்தவில்லை.

இதையும் படிங்க : GT vs MI : நாங்க தோத்திருந்தாலும் அவரோட ஆட்டம் பிரமாதமாக இருந்தது. தோல்விக்கு பிறகு – ஹார்டிக் பாண்டியா பேட்டி

இந்த போட்டியில் இரண்டு ஷாட்டுகள் என் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தன. ஒன்று ஃபைன் லெக் தலைக்கு மேல் அடிப்பது மற்றொன்று தேர்ட் மேன் மேல் அடிப்பது இந்த இரண்டு ஷாட்டையும் தான் நான் பயிற்சி போதும் அதிகமாக பிராக்டீஸ் செய்து வந்தேன். அந்த வகையில் இந்த போட்டியில் தெளிவான திட்டத்துடன் என்னால் எளிதாக பேட்டிங் செய்ய முடிந்தது என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement