- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட், ரோஹித் விட்ட இடத்தை பக்குவமாக நிரப்பி வரும் சூரியகுமார் யாதவ் – தொடரும் அசத்தல்

கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற கையோடு இந்திய அணியின் சீனியர் வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஒன்றாக ஓய்வை அறிவித்தனர். இதன் காரணமாக தற்போது சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது இளம் வீரர்களை கொண்ட அணியாக டி20 தொடர்களில் பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்து வருகிறது.

தொடரும் சூரியகுமார் யாதவின் வெற்றிகள் :

அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் தற்போதே இந்திய அணி கைப்பற்றி விட்டது. இதன் மூலம் தொடர்ச்சியாக 2019-ஆம் ஆண்டு முதல் 17 டி20 தொடர்களை இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது.

- Advertisement -

அதோடு விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு அடுத்து அதே வழியில் தானும் ஒரு சிறந்த கேப்டன் என்பதை சூரியகுமார் யாதவ் நிரூபித்துள்ளார். அந்த வகையில் ஏற்கனவே அவரது தலைமையில் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக தென்ஆப்பிரிக்கா மண்ணில் நடைபெற்ற தொடரை சமன் செய்தது.

அதன் பின்னர் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிக்கு எதிரான தொடர்களை வாஷ் அவுட் செய்து வெற்றி பெற்றது. அதன் பின்னர் 2024-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த தொடரையும், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரையும் கைப்பற்றியுள்ளது.

- Advertisement -

இப்படி எந்த ஒரு தொடரிலுமே இந்திய அணியை தோல்வியை நோக்கி கொண்டு செல்லாமல் சூரியகுமார் யாதவ் மிகச்சிறப்பாக வழி நடத்தி வருகிறார். அதோடு இதுவரை அவர் கேப்டனாக பங்கேற்று விளையாடியிருந்த 21 போட்டியில் இந்திய அணி 17 வெற்றிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 14 மாதங்கள் கழித்து கம்பேக் கொடுத்த ஷமி நீக்கப்பட்டது ஏன்? மீண்டும் காயமா? மோர்கெல் பதில்

மேலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான மஹேந்திர சிங் தோனி, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை காட்டிலும் இவரது வெற்றி சதவீதம் ஆரம்பத்திலேயே மிக அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -