அப்படி பண்ணுவீங்கன்னு கொஞ்சம் கூட எதிர்பாக்கல.. பிசிசிஐ, தேர்வுக்குழு மீது ஷிகர் தவான் ஆதங்கம்

Shikhar Dhawan 2
- Advertisement -

நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் கடந்த 2010ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமானார். ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாறிக் கொண்டிருந்த அவரை அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி 2013 சாம்பியன்ஸ் ட்ராபியில் ரோஹித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறக்கி விட்டார். அந்த வாய்ப்பில் அமர்க்களமாக செயல்பட்ட தவான் அதிக ரன்கள் குவித்து தங்க பேட் விருது வென்று இந்தியா கோப்பையை வெல்ல உதவினார்.

அப்போதிலிருந்து நிலையான துவக்க வீரராக உருவெடுத்த அவர் 2015 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் அடித்து 2017 சாம்பியன்ஸ் ட்ராபியில் மீண்டும் தங்க பேட் விருது வென்றார். மேலும் 2018 ஆசிய மற்றும் நிதஹாஸ் முத்தரப்பு கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்று இந்தியாவின் வெற்றியில் பங்காற்றிய அவர் 2019 உலகக்கோப்பையில் காயத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்து வெற்றியில் முக்கிய பங்காற்றி வெளியேறினார்.

- Advertisement -

யாருமே சொல்லல:
ஆனால் காயத்திலிருந்து குணமடைந்த பின் சற்று தடுமாற்றமாக செயல்பட்ட அவரை கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விட்ட பிசிசி ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக மட்டுமே தேர்வு செய்தது. அந்த வரிசையில் சீனாவில் நடைபெற்ற 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இளம் இந்திய அணியின் கேப்டனாக தவான் விளையாடுவார் என்று செய்திகள் வெளியானது.

இருப்பினும் கடைசி நேரத்தில் அவரை கழற்றி விட்ட தேர்வுக் குழு ருதுராஜ் கைக்வாட் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவித்தது. இந்நிலையில் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தாம் விளையாடுவேன் என்று மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்த்ததாக ஷிகர் தவான் கூறியுள்ளார். ஆனால் கடைசியில் தேர்வுக் குழு மற்றும் பிசிசிஐ உட்பட யாருமே தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் கழற்றி விட்டதை எதிர்பார்க்கவில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் என்னுடைய பெயர் இல்லாதது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. ஆனால் அதன் பின் இந்திய அணியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இருக்கக்கூடிய சிந்தனைகளை நான் புரிந்து கொண்டேன். நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இருப்பினும் என்னுடைய வருங்காலத்தைப் பற்றி எந்த தேர்வுக்குழு உறுப்பினரும் என்னிடம் பேசவில்லை”

இதையும் படிங்க: 2024 டி20 உ.கோ இந்திய அணிக்கு கேப்டனாக சரியானவர் யார்? பாண்டியாவா – ரோஹித்தா? யுவி பதில்

“2018இல் கடைசியாக நான் நாட்டுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினேன். அதன் பின் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தினேன். கடந்த 4 – 5 வருடங்களாக டெஸ்ட் அணியில் எனக்கு இடமில்லை. ஒவ்வொரு விளையாட்டு வீரர்களின் வாழ்விலும் வயது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாததால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு என்னுடைய உடலை புத்துணர்ச்சியாக வைத்தேன்” என்று கூறினார்.

Advertisement