டி20 போட்டியோ.. ஒருநாள் போட்டியோ.. என்னோட மைண்ட் செட் இதுமட்டும் தான் – சூரியகுமார் அதிரடி பேட்டி

Suryakumar-Yadav
- Advertisement -

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக தற்போது உருவெடுத்துவரும் சூரியகுமார் யாதவ் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 9 ஒருநாள் போட்டிகள் மற்றும் 19 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். இந்திய அணிக்காக அறிமுகமாகியதில் இருந்தே தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யா குமார் யாதவ் அண்மையில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் இறுதி ஆட்டத்தில் கூட சதம் அடித்து அசத்தியிருந்தார்.

Suryakumar Yadav

- Advertisement -

இந்நிலையில் அந்த டி20 தொடரை தொடர்ந்து தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் அவர் மூன்றாவது மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் தான் பேட்டிங் செய்யும் விதம் குறித்து பேசியிருந்த அவர் கூறுகையில் :

டி20 போட்டியாக இருந்தாலும் சரி, ஒரு நாள் போட்டியாக இருந்தாலும் சரி என்னுடைய அணுகுமுறை எப்போதும் ஒன்று மட்டும் தான். அது யாதெனில் என்னுடைய இயல்பான ஆட்டத்தை நான் எந்த வகையான கிரிக்கெட்டிலும் வெளிப்படுத்த விரும்புகிறேன். ஏனெனில் என்னுடைய இயல்பான ஆட்டம் தான் என்னுடைய பலம். அதனை எப்போதும் நான் மாற்றிக் கொள்ள மாட்டேன்.

Suryakumar Yadav 1

ஒரு பக்கம் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக விழுந்து கொண்டிருந்தாலும் அணியின் எண்ணிக்கையை அதிகரிக்கவே நான் எப்போதும் விரும்புவேன். எனவே என்னுடைய இயல்பான ஆட்டத்தை என்னுடைய மைண்ட் செட்டாக வைத்து எந்த வித போட்டியாக இருந்தாலும் நான் என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : டி20 போட்டியில் சதம் அடித்தது மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்தது. என்னிடம் இருந்து எப்போதும் ரன்கள் வரும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதும் எனக்கு புரிகிறது.

இதையும் படிங்க : IND vs ENG : 3 ஆவது போட்டியில் ஜெயிக்கணுனா இந்த ஒரு தப்பை மட்டும் பண்ணாதீங்க – ஆர்.பி.சிங் கருத்து

எனவே நிச்சயம் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நான் சிறப்பாக செயல்படுவேன். நான் ரன்கள் அடித்து இந்திய அணி வெற்றிபெறும் போதெல்லாம் எனக்கு கூடுதல் உத்வேகம் கிடைக்கிறது என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement