IND vs ENG : 3 ஆவது போட்டியில் ஜெயிக்கணுனா இந்த ஒரு தப்பை மட்டும் பண்ணாதீங்க – ஆர்.பி.சிங் கருத்து

RP-Singh
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்று முடிந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இதன் காரணமாக இன்று நடைபெற இருக்கும் கடைசி போட்டியில் வெற்றிபெறும் அணி இந்த தொடரை கைப்பற்றும் என்பதனால் இந்த கடைசி போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

INDvsENG

- Advertisement -

ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்ற இந்திய அணியானது இரண்டாவது போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியின் காரணமாக இந்திய அணியின் மீது சில விமர்சனங்களும் எழுந்துள்ளன. மேலும் இந்திய அணி செய்யும் சில சிறு சிறு தவறுகளையும் பல்வேறு வீரர்களும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் இரண்டாவது போட்டியின் தோல்விக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ஆர்.பி.சிங் இந்திய அணி செய்யும் சில தவறுகளை குறிப்பிட்டு பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் : இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஒருநாள் போட்டியில் விளையாடும் போது அவர்களது மைண்ட் செட்டை மாற்றியாக வேண்டும். ஒருநாள் போட்டிகளில் பெரிய ஷாட்டிற்கு முயற்சி செய்யாமல் பந்திற்க்கு மதிப்பு கொடுத்து தேவையான போது அதிரடியாக விளையாட வேண்டும்.

Reece Topley 1

நிச்சயம் இந்திய அணியின் டாப் ஆர்டரில் உள்ள ஒரு பேட்ஸ்மேன் போட்டியின் இறுதிவரை விளையாட வேண்டும். ஏனெனில் இங்கிலாந்து போன்ற மைதானங்களில் டாப் ஆர்டரில் இருக்கும் ஒரு முக்கிய வீரர் இறுதிவரை விளையாடினால் மட்டுமே அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியும். அந்த வகையில் கடந்த போட்டியின் போது இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் இந்திய அணி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

ஆனால் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற வேண்டுமெனில் நிச்சயம் டாப் ஆர்டரில் இருக்கும் வீரர்கள் தங்கள் பொறுப்பினை உணர்ந்து ஒரு பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டியது அவசியம். அதேபோன்று இந்திய அணி கடந்த இரண்டாவது போட்டியில் ஒரு மிகப்பெரிய தவறு செய்து விட்டனர். அதன்படி விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட்டை நான்காவது இடத்திலும், சூரியகுமார் யாதவை ஐந்தாவது இடத்திலும் விளையாட வைத்தனர்.

Sky-1

என்னை பொறுத்தவரை இந்திய அணியின் அந்த முடிவு ஒரு தவறான முடிவு. ஏனெனில் சூரியகுமார் யாதவ் நான்காவது இடத்தில் களமிறங்கி அற்புதமாக செயல்பட்டு வரும் வீரராக திகழ்கிறார். அதோடு அணியை பெரிய ரன் குவிப்பிற்கு அழைத்துச் செல்லும் திறமையும், ரன்னை அதிகம் சேர்க்கும் கட்டமைப்பையும் அவர் அற்புதமாக வைத்திருப்பதால் ஆரம்பத்திலேயே விக்கெட் விழுந்தாலும் சூரியகுமார் யாதவ் தான் நான்காவது இடத்தில் விளையாட வேண்டும்.

- Advertisement -

எனவே பேட்டிங் ஆர்டரில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்து தப்பு செய்து விட வேண்டாம் என்று ஆர்.பி.சிங் கூறியுள்ளார். அதேபோன்று விராட் கோலியின் பார்ம் குறித்து பேசியிருந்த அவர் : விராட் கோலியின் இந்த சரிவு எனக்கு நிச்சயம் வருத்தம் அளிக்கிறது.

இதையும் படிங்க : IND vs ENG : விராட் கோலி இல்ல 3 ஆவது போட்டியில் நீக்கப்பட போற பிளேயர் இவர்தானாம் – தகவல் இதோ

இருந்தாலும் விராட் கோலி போன்ற வீரர்கள் ஒரு சில பவுண்டரிகளை அடித்து செட்டாகும் போது நிச்சயம் அவர் அவர்களது ரிதம் மீண்டும் வந்து மிகப்பெரிய ரன் குவிப்பிற்கு செல்வார்கள். அந்த வகையில் விராட் கோலி இந்த கடைசி போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக ஆர்.பி.சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement