தோனியுடனான அன்பு எப்படி பட்டது ? தோனியுடனான அனுபவம் குறித்து பேசிய – நடிகர் சூர்யா

Surya
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் நடப்பு 14-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி தற்போது சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

KKRvsCSK

இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியை நேரடியாக ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் தமிழ் நடிகர் சூர்யா தோனி குறித்த சில சுவாரஸ்யமான விடயங்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

தோனி நம்மிடம் செலுத்தும் அன்பு என்பது அளப்பரியது. அதை நாம் எப்படி திரும்பக் கொடுப்பது என்று எண்ணி நான் தவித்தது உண்டு. இப்போது கூட ஒரு போட்டியின்போது ஆட்டத்தை காண வந்த சிறுமி கண்கலங்கி இருந்தார். அதனை கண்ட தோனி போட்டி முடிந்த பிறகு மேட்ச் பாலில் கையெழுத்து போட்டு அந்த சிறுமியிடம் பரிசாக கொடுத்து ஆனந்த படுத்தினார். இப்படி தோனி அன்பு ரசிகர்கள் மீது இருப்பது அளப்பரியது.

Suriya 2

எனது குழந்தைகளை கூட அவர் நேரில் சந்தித்திருக்கிறார். அதுமட்டுமின்றி எனது மனைவி ஜோதிகாவும் அவரை சந்திக்க வேண்டும் என என்னிடம் கேட்டார். அதற்கும் தோனி எனக்கு நேரம் ஒதுக்கி கொடுத்து இருந்தார் எனக் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி தொடர்ந்து பேசிய அவர் : 24 என்கிற தமிழ் படத்தில் நடித்தபோது தோனியை சந்தித்து அவருடன் செல்பி எடுத்துக் கொள்வது போல ஒரு காட்சி அமைந்திருக்கும், அந்த காட்சிக்கும் தோனி சம்மதம் சொல்லியிருந்தார்.

இதையும் படிங்க : நான் ஒரு டி20 அணியை தேர்ந்தெடுத்தால் அதில் நிச்சயமாக இவருக்கு இடமில்லை – சஞ்சய் மஞ்சரேக்கர்

இப்படி அவருடைய அன்புக்கு எல்லையே கிடையாது. அவருக்கு நாம் எப்படி அன்பை திருப்பி செலுத்தும் என்பதில் மட்டுமே எனது எண்ணம் இருக்கும் என சூர்யா கூறியிருக்கிறார். ஏற்கனவே தமிழ் நடிகர்கள் பற்றி பேசும் போது எப்போதும் தோனி சூர்யாவை புகழ்ந்தது உண்டு.

Advertisement