IPL 2023 : சேவாக் மாதிரி ஆடுறாரு, நான் தேர்வுக்குழு தலைவரா இருந்தா அவர உ.கோ’க்கு செலக்ட் பண்ணுவேன் – ரெய்னா கோரிக்கை

raina
Advertisement

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 11ஆம் தேதி நடைபெற்ற 56வது லீக் போட்டியில் கொல்கத்தாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ராஜஸ்தான் புள்ளி பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து கொல்கத்தா நிர்ணயித்த வெறும் 150 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு கேப்டன் நித்திஷ் ராணா வீசிய முதல் ஓவரிலேயே வரலாற்றில் அதிகபட்சமாக 26 ரன்கள் அடித்து சாதனை படைத்த யசஎஸ்வி ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் 50 ரன்களை தொட்டு அதிவேகமாக அரை சதமடித்த வீரர் என்ற வரலாற்றையும் படைத்தார்.

Yashasvi Jaiswal 2

தொடர்ந்து கொல்கத்தா பவுலகர்ளை கருணை காட்டாமல் சரமாரியாக அடித்து நொறுக்கி துவம்சம் செய்த அவர் சதத்தை தவற விட்டாலும் 12 பவுண்டரி 5 சிக்ஸருடன் 98* (47) ரன்களை விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் கேப்டன் சஞ்சு சாம்சன் தனது பங்கிற்கு 48* (29) ரன்கள் எடுத்ததால் 13.1 ஓவரிலேயே இலக்கை எட்டிப் பிடித்த ராஜஸ்தான் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியது. அந்த வெற்றிக்கு சந்தேகமின்றி 98* ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

ரெய்னா கோரிக்கை:
இளமையில் வறுமையுடன் ஏழை குடும்பத்தில் பிறந்து பானி பூரி விற்று கிரிக்கெட்டின் மீதான காதலால் மும்பைக்கு விளையாடத் துவங்கி அசத்திய அவர் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 2020 அண்டர்-19 உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து இந்தியாவை ஃபைனல் வரை அழைத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றினார். அப்போதிலிருந்தே ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பையில் இரட்டை சதம் மற்றும் சதங்கள் விளாசி இந்தியா ஏ அணிக்காகவும் சதமடித்து உள்ளூர் அளவில் அசத்தி வந்த அவர் இந்த ஐபிஎல் தொடரில் மும்பைக்கு எதிராக கடந்த வாரம் இதர வீரர்கள் சேர்ந்து 63 ரன்கள் மட்டுமே எடுத்த போது தனி ஒருவனாக 124 (62) ரன்களை விளாசி வரலாற்றின் 1000வது போட்டியில் ராஜஸ்தான் 212/7 ரன்கள் எடுக்க உதவியதை யாராலும் மறக்க முடியாது.

Jaiswal and Rohit

அப்படி அடிமட்டத்திலிருந்து கடினமாக உழைத்து தற்போது ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரை சதமடித்த வீரராக சாதனை படைத்துள்ள அவர் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ளன. அந்த வரிசையில் தாம் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் உலக கோப்பைக்கு ஜெய்ஸ்வாலை தேர்ந்தெடுப்பேன் என்று முன்னாள் சுரேஷ் ரெய்னா வெளிப்படையான பாராட்டுடன் கோரிக்கையும் வைத்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக வீரேந்திர சேவாக் போல அதிரடியாக விளையாடுவதாக தெரிவிக்கும் ரெய்னா இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்ருமாறு. “ஒருவேளை நான் இந்திய அணியின் தேர்வுக்குழுவில் இருந்தால் நிச்சயமாக இன்றே அவரை உலகக் கோப்பைக்காக தேர்ந்தெடுப்பேன். ஏனெனில் அவர் புத்துணர்ச்சியுடன் புதுமை கலந்த மனதுடன் விளையாடுகிறார். அவர் எனக்கு வீரேந்திர சேவாக்கை நினைவுபடுத்துகிறார். எனவே ரோகித் சர்மா அவரைப் பார்த்துக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். ஏனெனில் உலகக் கோப்பைக்காக அவரைப் போன்ற பேட்ஸ்மேன்களை தான் ரோகித் சர்மா தேடிக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார்.

Raina

அவர் கூறுவது போல முதல் ஓவரிலேயே பவுண்டரியுடன் சரவெடியாக விளையாடும் ஜெய்ஸ்வால் முன்னாள் வீரர் சேவாக் இடது கை பேட்ஸ்மேனாக களமிறங்கினால் எப்படி செயல்படுவாரோ அதே போல் அசத்தி வருகிறார். மறுபுறம் சமீப காலங்களாகவே நட்சத்திர சீனியர் வீரர்களால் உலகக் கோப்பையில் இந்தியா தொடர் தோல்விகளை தான் சந்தித்து வருகிறது.

இதையும் படிங்க:IPL 2023 : சிரிக்குறேன்னு நினைக்காதீங்க, சிஎஸ்கே ரசிகர்களால் மன உளைச்சலில் இருக்கேன் – ஜடேஜா ஆதங்கம், நடந்தது என்ன

அதனால் 2024 டி20 உலக கோப்பையில் இளம் அணியை உருவாக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ள பிசிசிஐ ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது இந்தியாவுக்கு தான் பெரிய நன்மையாக அமையும் என்று சொல்லலாம். அத்துடன் நேற்றைய போட்டியில் விராட் கோலி, சூரியகுமார் யாதவ் போன்ற நிறைய நட்சத்திரங்களின் பாராட்டுகளை பெற்ற ஜெய்ஸ்வால் விரைவில் இந்தியாவுக்கு விளையாடுவதை பார்க்க முடியும் என்றே சொல்லலாம்.

Advertisement