கோலி அவசரப்பட்டு டி20யில் ரிட்டையராகிட்டாரு.. இந்தியாவுக்கு அந்த உ.கோ விளையாட தகுதியானவர்.. ரெய்னா

Suresh Raina
- Advertisement -

suresh raina wants virat kohli to play t20wc 2026

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ரஜத் படிதார் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் கோப்பையை வெல்லும் பயணத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அதில் ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற்ற 42வது போட்டியில் ராஜஸ்தானை 11 வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு 206 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

- Advertisement -

அதைத் துரத்திய ராஜஸ்தான் 20 ஓவரில் 194/9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைச் சந்தித்தது. பெங்களூரு அணிக்கு பேட்டிங் துறையில் அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 70, படிக்கல் 50 ரன்கள் எடுத்தனர். பந்து வீச்சுத் துறையில் அதிகபட்சமாக ஜோஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

முன்னதாகவே ஓய்வு:

முன்னதாக அப்போட்டியில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மீண்டும் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 70 (42) ரன்கள் விளாசி பெங்களூரு அணியின் வெற்றியில் பங்காற்றினார். கடந்தப் போட்டியிலும் அபாரமாக விளையாடிய அவர் ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார். மேலும் இதுவரை 9 போட்டிகளில் விராட் கோலி 392 ரன்கள் அடித்துள்ளார்.

- Advertisement -

அதன் வாயிலாக அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் தமிழகத்தின் சாய் சுதர்சனுக்கு பின் அவர் 2வது இடத்தில் ஜொலித்து வருகிறார். இந்நிலையில் இப்படி அசத்தலாக விளையாடி வரும் விராட் கோலி அவசரப்பட்டு முன்னதாகவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்டதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி விளையாடுவதற்கு தகுதியுடையவர் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

ரெய்னா பாராட்டு:

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் நேரலையில் ரெய்னா பேசியது பின்வருமாறு. “விராட் கோலி முன்னதாகவே ஓய்வு பெற்று விட்டார். அவர் 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும். அவருடைய ஆட்டத்தை நாம் கடந்த 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பார்த்தோம். விராட் கோலி இப்போதும் டபுள் ரன்களை எடுக்க வேகமாக ஓடுகிறார்”

இதையும் படிங்க: அது மட்டும் கிடைச்சா போதும்.. சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி ஜெய்க்க இதான் வழி.. கிங் கோலி பேட்டி

“மேலும் ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்தும் செயல்பாடுகள் அவரிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் மீதம் இருப்பதைக் காட்டுகிறது” என்று கூறினார். முன்னதாக 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் வருங்கால வீரர்களுக்கு வழி விடும் வகையில் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் ஒன்றாக ஓய்வு பெற்றனர். இருப்பினும் தங்களுடைய கிளாஸ் மற்றும் தரத்தின் காரணமாக அவர்கள் இருவருமே ஐபிஎல் தொடரில் அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement