அவங்கள பாத்து திருந்துங்க.. 2010, 2011 மாதிரி சிஎஸ்கே ஜெய்க்க தமிழ்நாட்டு பிளேயர்ஸ் வேணும்.. ரெய்னா அட்வைஸ்

Suresh Raina 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து போயுள்ளது. ஏனெனில் இந்த வருடம் முதல் போட்டியிலேயே மும்பையை தோற்கடித்த சென்னை அதற்கடுத்த 5 போட்டிகளில் வரலாற்றிலேயே முதல் முறையாக 5 தொடர் தோல்விகளை சந்தித்தது. இருப்பினும் லக்னோவுக்கு எதிராக தோனி தலைமையில் வென்ற சென்னை தொடர்ந்து அசத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மும்பைக்கு எதிரான போட்டியில் மீண்டும் மோசமாக விளையாடிய சென்னை போராடாமலேயே 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் திண்டாடும் சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல அடுத்த 6 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெறுவதற்கு பெயர் போன சென்னை தற்போது இப்படி தடுமாறுவது சிஎஸ்கே ரசிகர்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

- Advertisement -

குஜராத்தை பாத்து திருந்துங்க:

முன்னதாக சிஎஸ்கே அணியில் சமீப காலங்களாகவே தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. அந்த சூழ்நிலையில் இம்முறை ரவிச்சந்திரன் அஸ்வின், விஜய் சங்கர் ஆகியோருக்கு சிஎஸ்கே நிர்வாகம் வாய்ப்பு கொடுத்துள்ளது. ஆனால் அந்த காலம் கடந்த வீரர்களால் தாக்கத்தை ஏற்படுத்தி சிஎஸ்கே அணியின் வெற்றிகளில் பங்காற்ற முடியவில்லை.

இந்நிலையில் சிஎஸ்கே அணி வெற்றிப் பெறுவதற்கு டிஎன்பிஎல் தொடரில் கிடைக்கும் தரமான இளம் தமிழக வீரர்களை கண்டறிந்து வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா கேட்டுக் கொண்டுள்ளார். எடுத்துக்காட்டாக குஜராத் அணியில் சாய் சுதர்சன், சாய் கிஷோர், சாருக்கான் போன்ற தமிழக வீரர்கள் அசத்துவதை ரெய்னா சுட்டிக்காட்டியுள்ளார். அது போன்ற வீரர்களை 2010, 2011 காலகட்டங்களில் கொண்டிருந்ததாலயே சென்னை கோப்பைகளை வென்றதாகவும் ரெய்னா கூறியுள்ளார்.

- Advertisement -

ரெய்னா அட்வைஸ்:

இது பற்றி தம்முடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “டிஎன்பிஎல் தொடரில் லோக்கல் வீரர்கள் எப்படி அசத்துகிறார்கள் என்பதைப் பாருங்கள். அங்கிருந்து வந்த சாய் சுதர்சன் குஜராத்துக்காக சிறப்பாக விளையாடுகிறார். அவருடன் சாய் கிஷோர், ஷாருக்கான் ஆகியோரும் குஜராத்துக்கு நன்றாக விளையாடுகின்றனர். அவர்களைப் போல நீங்களும் உள்ளூர் வீரர்களை கொண்டு வர வேண்டும்”

இதையும் படிங்க: முதல் இந்திய ஜோடியாக அசத்தல் சாதனையை நிகழ்த்திய சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் – விவரம் இதோ

“நாங்கள் வெல்லும் போது சிஎஸ்கே அணியில் தமிழகத்தைச் சேர்ந்த முரளி விஜய், லக்ஷ்மிபதி பாலாஜி, பத்ரிநாத், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருடன் எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, ஆகியோர் இருந்தனர். அப்படி சென்னை அணியில் உள்ளூர் வீரர்கள் கலவையாக இல்லாமல் போனால் உங்களுக்கு எதுவும் நன்றாக வேலை செய்யாது” என்று கூறினார்.

Advertisement