இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 39-வது லீக் போட்டியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
முதல் இந்திய ஜோடியாக சாதனை நிகழ்த்திய சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை குவித்தது. குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 90 ரன்களையும், சாய் சுதர்சன் 52 ரன்களையும் குவித்து அசத்தினார்.
பின்னர் 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது குஜராத் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக குஜராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது கொல்கத்தா அணி சார்பாக ரஹானே 50 ரன்களையும், ரகுவன்ஷி 27 ரன்களையும் குவித்தனர். இந்நிலையில் இந்த போட்டியின் போது குஜராத் அணி சார்பாக விளையாடிய துவக்க வீரர்களான சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோரது ஜோடி ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனைஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளது.
அந்த வகையில் நேற்றைய போட்டியின் முதல் விக்கெட்க்கு 114 ரன்கள் சேர்த்த அந்த ஜோடி ஐபிஎல் வரலாற்றில் ஆறாவது முறையாக 100 ரன்களை ஜோடியாக பாட்னர்ஷிப் மூலம் குவித்துள்ளனர். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக முறை 100 பிளஸ் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் இந்திய ஜோடியாக சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
இதையும் படிங்க : சிக்ஸரால் காயமடைந்த ரசிகருக்காக பூரான் செய்த நெஞ்சைத் தொடும் செயல்.. லக்னோ ரசிகர் நெகிழ்ச்சி பேட்டி
ஒட்டுமொத்தமாக ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர் 10 முறை 100 பிளஸ் பார்ட்னர்ஷிப் அமைத்து முதலிடத்திலும், கிரிஸ் கெயில் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒன்பது முறை 100 ரன்களுக்கு மேல் பாட்னர்ஷிப் அமைத்து இரண்டாவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



