இந்த வருஷம் ஐ.பி.எல் கோப்பையை அவங்கதான் ஜெயிக்கனும். அதுதான் என் ஆசை – சுரேஷ் ரெய்னா விருப்பம்

Raina
Advertisement

இந்தியாவில் கடந்த மார்ச் 26 ஆம் தேதி துவங்கிய 15வது ஐபிஎல் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 74 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 70 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது பிளேஆப் சுற்றுப்போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. இந்த வருட பிளே ஆப் சுற்றுக்கு குஜராத், ராஜஸ்தான், லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் முன்னேறியுள்ளன. இதில் இன்று நடைபெற்று வரும் முதல் குவாலிபயர் போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

Hardik Pandya GT Vs RR 2.jpeg

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். அதே வேளையில் இந்த போட்டியில் தோல்வி அடையும் அணி எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியோடு இரண்டாவது குவாலிபயர் 2 போட்டியில் விளையாடும். அந்த போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடதக்கது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் எந்த அணி வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என்பது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரருமான சுரேஷ் ரெய்னா இந்த 15ஆவது ஐபிஎல் தொடரை எந்த அணி வெல்ல வேண்டும் என்பது குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

RCB Faf Virat

என்னை பொறுத்தவரை இந்த ஐபிஎல் தொடரை பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி தான் ஜெயிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது அந்த காரணம் வேறு ஏதும் இல்லை விராட் கோலி மட்டுமே. அவருக்காகவே நிச்சயம் பெங்களூரு இந்த முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என ரெய்னா கூறியுள்ளார்.

- Advertisement -

அவர் கூறிய இந்த கருத்துக்கள் சமூக வலைதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஆண்டுதோறும் மிகப்பெரிய பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை ஒரு முறை கூட ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றியது இல்லை. அதோடு விராட் கோலியும் கடந்த பல ஆண்டுகளாக கேப்டனாக செயல்பட்டு பல மெகா வீரர்களை வைத்து இருந்தாலும் அவரால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 பைனலில் விளையாடப்போகும் 2 அணிகள் இதுதான் – முன்னாள் இங்கிலாந்து வீரரின் கணிப்பு

இந்நிலையில் இந்த ஆண்டு முதல் முறையாக டு பிளிசிஸ் தலைமையில் ஒரு முழுநேர பேட்ஸ்மேனாக விராட் கோலி விளையாடி வரும் வேளையில் பெங்களூரு அணியானது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement