தோனி சொன்ன அந்த ஒரு வார்த்தைக்காக தான் கேப்டன்சி வேணாம்னு முடிவு பண்ணேன் – மனம்திறந்த சுரேஷ் ரெய்னா

MS Dhoni Suresh Raina
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் சரி, சென்னை அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடிய போதும் சரி தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் எந்த அளவிற்கு நட்புடன் இருந்தார்கள் என்பது ரசிகர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த அளவிற்கு தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் மிகவும் நெருக்கமான நண்பர்களாக இருந்து வந்தனர். இந்திய அணிக்காக தோனியின் தலைமையில் சுரேஷ் ரெய்னா எப்படி ஒரு முக்கியமான வீரராக இருந்தாரோ அதேபோன்று ஐபிஎல் தொடர்களிலும் சிஎஸ்கே அணியின் துணை கேப்டனாக ரெய்னா இருந்து வந்தார்.

Raina

- Advertisement -

அதோடு சென்னை அணியின் பல வெற்றிகளுக்கு மிக முக்கியமான காரணமாகவும் சுரேஷ் ரெய்னா திகழ்ந்து வந்தார். ரசிகர்கள் மத்தியில் தோனிக்கு “தல” என்கிற செல்ல பெயர் இருந்து வரும் வேளையில் சுரேஷ் ரெய்னாவுக்கு “சின்ன தல” என்ற பெயரும் உண்டு. அந்த அளவிற்கு சென்னை ரசிகர்களும் அவரின் மீது அன்பை பொழிந்து வந்தனர்.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக கேப்டன்சி செய்து விளையாடிய பிறகு தனக்கு வந்த கேப்டன்சி வாய்ப்புகள் குறித்து தற்போது சுரேஷ் ரெய்னா மனம் திறந்த பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

Raina

ஐபிஎல் தொடர்களில் நான் குஜராத் அணிக்காக கேப்டன்சி செய்த பின்னர் பல்வேறு ஐபிஎல் அணிகளும் என்னை தொடர்பு கொண்டு அவர்களின் அணிக்கு கேப்டன்சி செய்ய கேட்டுக் கொண்டார்கள். ஆனால் நான் இந்த விவகாரம் குறித்து தோனியிடம் பேசினேன். அப்போது தோனி என்னிடம் :

- Advertisement -

நீ எங்கும் போகாதே, நான் தான் கேப்டன். நீ தான் எப்போதும் என் துணை கேப்டன் என்று கூறினார். அவருடைய அந்த ஒரு வார்த்தைக்கு பிறகு நான் என்னுடைய கேப்டனை வெற்றி பெற வைப்பதற்காகவும், என்னுடைய அணியை வெற்றி பெற வைப்பதற்காக மட்டுமே விளையாடினேன். சென்னை அணியின் துணை கேப்டனாக எப்போதுமே மகிழ்ச்சியாக இருந்திருக்கிறேன்.

இதையும் படிங்க : சொந்த மண்ணில் இந்தியா 2023 உ.கோ ஜெயிக்கும்ன்னு எல்லாரும் சொல்றீங்க ஆனா – ரசிகர்களுக்கு ஆறுதல் கூறும் அஷ்வின்

கேப்டன்சி செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதும் இருந்ததில்லை. தோனி ஓய்வு அறிவித்த பின் நானும் விளையாட்டை தொடர்வதற்கான காரணங்கள் இல்லாமல் போனது. ஏனென்றால் இந்திய அணியில் நான் அவருக்காகவே கம்பேக் கொடுக்க வேண்டும் என்று முயற்சித்தேன் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement