சொந்த மண்ணில் இந்தியா 2023 உ.கோ ஜெயிக்கும்ன்னு எல்லாரும் சொல்றீங்க ஆனா – ரசிகர்களுக்கு ஆறுதல் கூறும் அஷ்வின்

Ashwin
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. வரலாற்றில் 3வது முறையாக இந்தியாவில் நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் கோப்பை வெல்வதற்காக 48 போட்டிகளில் மோத உள்ளன. குறிப்பாக சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல சாம்பியன் பட்டம் வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் பரிதாப தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இருப்பினும் 5 கோப்பைகளை வென்ற அனுபவமிக்க ரோஹித் சர்மா தலைமையில் ஏற்கனவே 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்தித்த இந்தியா 2023 டெஸ்ட் சாம்பியன்ஸ் ஃபைனலிலும் கொஞ்சம் கூட போராடாமல் தோற்று எந்த மாற்றத்தை முன்னேற்றத்தையும் காணவில்லை என்பதை நிரூபித்தது. அதே போல ஜஸ்பிரித் பும்ரா இன்னும் குணமடையாமல் இருப்பது பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில் சுமாராக செயல்படும் வீரர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்புகளை கொடுக்கும் குளறுபடிகளும் இந்திய அணியில் அரங்கேறி வருகின்றன.

அஸ்வின் பதில்:
அதனால் இம்முறையும் இந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்லப்போவதில்லை என்று நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசுவதை பார்க்க முடிகிறது. சொல்லப்போனால் ஐபிஎல் தொடரில் விளையாடி இந்தியாவின் கால சூழ்நிலைகள் மற்றும் இந்திய வீரர்களின் பலம் பலவீனங்களை வெளிநாட்டு அணிகள் நன்றாக தெரிந்து வைத்துள்ளன. அதனால் சொந்த மண் சாதகம் என்பது இந்தியாவுக்கு பெயருக்காக மட்டுமே இருக்கும் என்றே சொல்லலாம். அதை விட 10 வருடங்களாக தோற்று வருவதால் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் வென்றே தீர வேண்டும் என்ற வெளிநாட்டு அணிகளுக்கு இல்லாத மாபெரும் அழுத்தத்தில் இந்தியா விளையாட உள்ளது.

INDia

இந்நிலையில் 2019 உலகக் கோப்பையிலும் இதே போல் இந்தியா வெல்லும் என்று அனைவரும் சொன்ன போதிலும் அது நடைபெறவில்லை என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். மேலும் சொந்த மண்ணாகவே இருந்தாலும் ஐசிசி தொடரில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு 50% மட்டுமே என்று தெரிவிக்கும் அவர் அதிகமாக எதிர்பார்க்க வேண்டாம் என ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “2019 உலகக்கோப்பையில் நாம் வெற்றி பெறும் அணியாக களமிறங்கினோம். ஆனால் உண்மை என்னவெனில் ஒவ்வொரு ஐசிசி தொடரிலும் அனைத்து அணிகளும் சமமான வாய்ப்புடன் தான் களமிறங்கும்”

- Advertisement -

“ஒருவேளை நீங்கள் என்னிடம் கேட்டால் எந்த ஒரு போட்டியுமே 50க்கு 50 என்ற வாய்ப்புடன் தான் துவங்கும். ஆனாலும் 2023 உலகக் கோப்பையை வெல்லும் அணியாக இந்தியா களமிறங்க உள்ளது. குறிப்பாக இந்தியா இந்த ஐசிசி கோப்பையை வெல்ல முடியுமா? என்பதே சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. சொல்லப்போனால் “ஐசிசி தொடரில் சந்தித்து வரும் தோல்வியை இந்தியா நிறுத்துமா” என்ற கேள்வியை நாம் நீண்ட வருடமாக கேட்டு வருகிறோம். இதே கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்டால் அது மிகவும் அபத்தமானது நண்பர்களே என்று பதிலளிப்பேன்”

Ashwin

“இருப்பினும் இந்தியா வலுவான அணி என்பதில் சந்தேகமில்லை. குறிப்பிட்ட சில குறைகளை தவிர்த்து இம்முறையும் இந்தியா வெல்வதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் இந்த தொடரை பொறுத்த வரை போட்டி துவங்கும் நேரங்கள் சரியாக அமைக்கப்படவில்லை என்று நான் கருதுகிறேன். குறிப்பாக இரவு நேரத்தில் ஏற்படும் பனியின் தாக்கத்தை குறைப்பதற்காக பகலிரவு போட்டிகள் இந்திய நேரப்படி 11.30 அல்லது 12 மணிக்கு துவங்குவது சரியாக இருக்கும். ஏனெனில் இந்த உலகக் கோப்பை அக்டோபரில் தான் நடைபெறுகிறது”

இதையும் படிங்க:கேப்டன் பதவிக்கு மரியாதை இல்லாம போச்சு, ரகானேவுக்கு பதில் அவர போடுங்க – தேர்வுக்குழு மீது சௌரவ் கங்குலி அதிருப்தி

“பொதுவாக உலகக்கோப்பை அந்த மாதத்தில் நடைபெறாத நிலையில் பனியன் தாக்கம் இருக்குமா என்பது கேள்வியாகும்? ஏனெனில் 2011 உலகக்கோப்பை கூட கோடை காலத்திற்கு முன்பாக பிப்ரவரி ஆரம்பித்து ஏப்ரல் முதல் வாரத்தில் முடிந்தது. அதன் பின் தான் ஐபிஎல் நடைபெற்றது” என்று கூறினார்.

Advertisement