கேப்டன் பதவிக்கு மரியாதை இல்லாம போச்சு, ரகானேவுக்கு பதில் அவர போடுங்க – தேர்வுக்குழு மீது சௌரவ் கங்குலி அதிருப்தி

Ganguly
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஜூலை மாதம் அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணி நிறைய விமர்சனங்களை எழுப்பியது. முதலில் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வியை பதிவு செய்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் சுமாராகவே கேப்டன்ஷிப் செய்த ரோகித் சர்மா பதவி விலக வேண்டும் என்று நிறைய ரசிகர்கள் கேட்டுக் கொண்டும் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல விராட் கோலி சுமாராக செயல்பட்டும் மொத்த பழியையும் புஜாரா மீது போட்டு கழற்றி விட்டுள்ளதாக சுனில் கவாஸ்கர் விமர்சித்தார்.

Ajinkya Rahane WTC Final

- Advertisement -

அத்துடன் டெஸ்ட் அணிக்கு ரஞ்சி கோப்பையில் அசத்தும் சர்பராஸ் கானை முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்ய வேண்டிய தேர்வுக்குழு அவரை மீண்டும் புறக்கணித்து ஐபிஎல் தொடரில் அசத்திய ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் ஆகியோரை தேர்ந்தெடுத்தது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. அதை விட வருங்காலத்தை கருத்தில் கொண்டு தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டிய தேர்வுக்குழு அஜிங்க்ய ரகானேவை துணை கேப்டனாக அறிவித்ததும் விமர்சனங்களை எழுப்பியது.

கங்குலி அதிருப்தி:
ஏனெனில் கடந்த 2022 பிப்ரவரியில் கழற்றி விடப்பட்டு கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட அவர் போராடி 18 மாதங்கள் கழித்து கம்பேக் கொடுத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அசத்தியதால் உடனடியாக துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். சொல்லப்போனால் 36க்கு ஆல் அவுட்டான பின் விராட் கோலிக்கு பதிலாக இந்தியாவை மிகச் சிறப்பாக வழி நடத்தி 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலிய மண்ணில் வென்று கொடுத்த அனுபவமிக்க அவர் அந்த பதவிக்கு தகுதியானவர் என்பதில் சந்தேகமில்லை.

Jadeja

ஆனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சுப்மன் கில் அல்லது அக்சர் பட்டேல் ஆகியோரை துணை கேப்டனாக நியமித்து வளர்ப்பதே சரியான முடிவாக இருக்கும் என சுனில் காவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். மேலும் 2022 பிப்ரவரியில் அதிரடியாக நீக்கப்பட்டு கவுண்டி தொடரில் சிறப்பாக செயல்பட்டு கம்பேக் கொடுத்த புஜாரா கடந்த டிசம்பரில் நடைபெற்ற வங்கதேச தொடரில் இதே போல துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் ஃபைனலில் சொதப்பியதால் மொத்தமாக கழற்றி விடப்பட்ட அவரை போல ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரகானே சுமாராக செயல்பட்டால் மீண்டும் நீக்குவீர்களா? என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

- Advertisement -

அந்த வகையில் துணை கேப்டன்ஷிப் பதவிக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டதாக தெரிவிக்கும் ரசிகர்கள் அஸ்வின் போன்றவரை நியமிக்கலாமே என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். இந்நிலையில் 18 மாதங்கள் அணியிலிருந்து வெளியே இருந்த ரகானே திடீரென துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட முடிவை புரிந்து கொள்ள முடியவில்லை என முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

Ganguly

மேலும் இன்றியமையாத வீரராக இருக்கும் ரவீந்திர ஜடேஜா அந்த பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்று தெரிவிக்கும் அவர் தேர்வு குழுவின் முடிவை விமர்சித்து பேசியது பின்வருமாறு. “ஆம் நானும் ரசிகர்களைப் போலவே நினைத்தேன். இருப்பினும் இதற்காக நாம் பின்னோக்கி நடக்கிறோம் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் 18 மாதங்கள் வெளியே இருந்து ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் சிறப்பாக விளையாடியதால் அவரை நீங்கள் துணைக் கேப்டனாக நியமித்துள்ளீர்கள்”

இதையும் படிங்க:அவரு மட்டும் பிட்டாகி டீமுக்குள்ள வந்துட்டா கண்டிப்பா இந்தியா தான் வேர்ல்டு கப் ஜெயிக்கும் – சீக்கா ஸ்ரீகாந்த் ஓபன்டாக்

“அதனால் இந்த முடிவின் பின்னணியில் இருக்கும் வருங்காலத்தை என்னால் எந்த வகையிலும் புரிந்து கொள்ள முடியவில்லை. இதே அணியில் ரவீந்திர ஜடேஜா நீண்ட காலமாக சிறப்பாக விளையாடி இன்றியமையாதவராக உள்ளார். அவர் தான் அந்த பதவிக்கு சரியானவர். அதை விட்டு விட்டு 18 மாதங்கள் கழித்து கம்பேக் கொடுத்தவரை நேரடியாக துணைக் கேப்டனாக அறிவித்த முடிவை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என்னை பொறுத்த வரை எப்போதும் இந்திய அணியின் தேர்வு என்பது வெப்பம் மற்றும் குளிர்ச்சி நிறைந்ததாக இருக்கக் கூடாது. மாறாக வருங்காலத்தை அடிப்படையாக கொண்டு தொடர்ச்சியான வாய்ப்பு கொடுப்பதாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement