அவரு மட்டும் பிட்டாகி டீமுக்குள்ள வந்துட்டா கண்டிப்பா இந்தியா தான் வேர்ல்டு கப் ஜெயிக்கும் – சீக்கா ஸ்ரீகாந்த் ஓபன்டாக்

Kris-Srikkanth
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையையும் நேற்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி வெளியிட்டு விட்டது. இம்முறை இந்தியாவில் இந்து தொடரானது நடைபெற உள்ளதால் 2011-ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் இம்முறை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்லும் என்று அதிக அளவு பேசப்பட்டு வருகிறது.

worldcup

- Advertisement -

அதே வேளையில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் சிலர் காயம் காரணமாக இன்னும் அணியில் இடம்பெறாமல் இருப்பது ஒரு பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 25 வயதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஒருவேளை இந்த உலககோப்பை தொடரில் விளையாட முடியாமல் போனால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில் ஒருவேளை ரிஷப் பண்ட் இந்த உலகக் கோப்பை தொடருக்கான அணியில் முழு உடற்தகுதியுடன் தேர்ச்சி பெற்று விளையாட தயாரானால் இந்திய அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் கூறுகையில் :

ரிஷப் பண்டின் காயத்தின் தன்மை குறித்த தகவல் இன்னும் நமக்கு உறுதியாக தெரியவில்லை. ஒருவேளை அவர் விளையாடும் அளவிற்கு உடற்தகுதி பெற்று விட்டால் நிச்சயம் இந்திய அணி இந்த உலகக் கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாகவே இருக்கும்.

- Advertisement -

ரிஷப் பண்டின் உடற்தகுதி தற்போது கேள்விக்குறியான ஒன்றாக இருந்தாலும் உலகக் கோப்பை தொடருக்குள் அவர் தயாராகிவிட்டால் அது அணிக்கு மிகப்பெரிய பலத்தை தரும். ரிஷப் பண்ட் போன்ற ஒரு வீரருடைய இடம் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று. ஒருவேளை அவர் விளையாட முடியவில்லை என்றால் அவரது இடத்தில் இஷான் கிஷனை விளையாட வைக்கலாம்.

இதையும் படிங்க : நான் எதிர்கொண்டதிலேயே அவர் தான் ரொம்ப பயங்கரமான பவுலர், ரசிகர்கள் எதிர்பாராத இந்திய வீரரை – பாராட்டிய ரெய்னா

இஷான் கிஷனும் ஒரு ஆபத்தான வீரர் தான். நிச்சயம் அவர் ஒரு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய ஒரு வீரர். என்னை பொருத்தவரை கே.எல் ராகுல், இஷான் கிஷன் போன்ற வீரர்கள் மிடில் ஆர்டரில் இருந்தால் இந்திய அணி இன்னும் சிறப்பாக செயல்படும் என ஸ்ரீகாந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement