நான் எதிர்கொண்டதிலேயே அவர் தான் ரொம்ப பயங்கரமான பவுலர், ரசிகர்கள் எதிர்பாராத இந்திய வீரரை – பாராட்டிய ரெய்னா

Raina
- Advertisement -

சர்வதேசம் முதல் ஐபிஎல் உட்பட அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் விளையாடும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களும் தங்களுடைய கேரியரில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டால் மட்டுமே சாதித்து பெரிய அளவில் வளர முடியும். குறிப்பாக பேட்ஸ்மேன்கள் பெரும்பாலான போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்து அசத்தினால் மட்டுமே தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று விளையாட முடியும். இருப்பினும் அதற்கு சவாலாக எதிரணிகளைச் சேர்ந்த பந்து வீச்சாளர்கள் மிகப்பெரிய சவாலை கொடுப்பார்கள். அந்த வகையில் எவ்வளவு பெரிய ஜாம்பவான் வீரர்களாக இருந்தாலும் அவர்களுக்கு சவால் கொடுப்பதற்கென்று சில பவுலர்கள் இருப்பார்கள்.

Raina-5

- Advertisement -

குறிப்பாக சச்சின் டெண்டுல்கருக்கு புள்ளி விவரங்கள் அடிப்படையிலேயே மெக்ராத், பிரட் லீ போன்றவர்கள் மிகவும் சவாலாக இருந்து அதிக முறை அவுட் செய்த பெருமையை கொண்டுள்ளார்கள். அந்த வகையில் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கடந்த 2008 – 2017 வரையிலான காலகட்டங்களில் பெரும்பாலும் தோனி தலைமையிலான இந்திய அணியில் முதன்மை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக செயல்பட்டு 2011 உலக கோப்பை போன்ற வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார். மேலும் அதிரடியாக விளையாடக்கூடிய அவரும் டேல் ஸ்டைன், மலிங்கா போன்ற சில மகத்தான பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

பயங்கரமான பவுலர்:
இந்நிலையில் தமது கேரியரில் எதிர்கொண்ட பவுலர்களில் எம்எஸ் தோனி தான் மிகவும் சவாலை கொடுத்த பவுலர் என்று ரசிகர்கள் கொஞ்சமும் நினைத்துப் பார்க்காத கருத்தை அவர் தெரிவித்துள்ளார். ஏனெனில் இந்தியாவுக்கு 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்து மின்னல் வேகத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்க விடும் அளவுக்கு விக்கெட் கீப்பிங் செய்யும் திறமையை கொண்ட தோனி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக பல போட்டிகளில் நங்கூரமாக நின்று வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ஃபினிஷராக போற்றப்படுகிறார்.

Raina

அப்படி பெரும்பாலும் கேப்டனாக இருந்ததால் அவர் ஃபீல்டிங் மற்றும் பந்து வீசுவதை பார்ப்பதே அரிதாகும். சொல்லப்போனால் ஒருநாள் கிரிக்கெட்டில் 1 விக்கெட் மட்டுமே எடுத்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெறும் 96 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இருப்பினும் களத்தில் லசித் மலிங்கா, முத்தையா ஆகியோர் கொடுத்த சவாலை விட வலைப்பயிற்சியில் தோனியின் பந்துகளை எதிர்கொள்வது தமக்கு கடினமாக இருந்ததாக சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். குறிப்பாக தெரியாத தனமாய் ஒரு முறை அவுட்டாகி விட்டால் அதை ஒரு மாதத்திற்கு சொல்லியே தோனி கடுப்பேற்றுவார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“லசித் மலிங்கா மற்றும் முரளிதரன் ஆகியோர் சவாலாக இருந்தார்கள். ஆனால் அவர்களைவிட வலைப்பயிற்சியில் எம்எஸ் தோனி தான் எனக்கு பெரிய சவாலாக இருந்தார். குறிப்பாக அவருடைய பந்தில் நீங்கள் ஒரு முறை அவுட்டாகி விட்டால் அடுத்த ஒன்றரை மாதத்திற்கு அவரது அருகே அமர முடியாது. ஏனெனில் அவர் தொடர்ந்து அதையே சொல்லி பேசியே கடுப்பேற்றுவார். இருப்பினும் அவர் ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின், மிதவேகம் உள்ளிட்ட பல்வேறு விதமாக வீசும் திறமையைக் கொண்டுள்ளார்”

Raina-2

“சொல்லப்போனால் வலைப்பயிற்சியில் அவர் நோபால் பந்துகளை வீசி விட்டு அதை சரியென்று எங்களிடம் வாதிடுவார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து வீசும் வாய்ப்பு கிடைத்தால் அதை விருப்பத்துடன் செய்வார். குறிப்பாக இங்கிலாந்தில் ஸ்விங் செய்வதற்கான சூழ்நிலைகளில் அவர் மிகவும் விருப்பத்துடன் பந்து வீசுவார்” என்று கலகலப்பாக கூறினார். முன்னதாக இந்தியா மற்றும் ஐபிஎல் தொடர்களில் ரெய்னா பெரிய அளவில் வளர்வதற்கு தோனி அதிகப்படியான ஆதரவை கொடுத்தார் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க:என் மண்டைல முடி இல்லாம ஏன் வழுக்கை ஆச்சுன்னு இப்போ தான் புரியுது – நேதன் லயன் கலகலப்பான பேட்டி

அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்ட ரெய்னா 2011 உலகக்கோப்பை 2013 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐபிஎல் தொடரில் 4 கோப்பைகளை தோனி கேப்டனாக வெல்வதற்கு உதவியாக இருந்தார். அப்படி அவர் மீதிருக்கும் அதிகப்படியான அன்பு காரணமாகவே தோனி விடைபெற்ற அதே நாளில் ரெய்னாவும் நட்புக்கு இலக்கணமாக சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement