என்னை விட ராபின் உத்தபாவிற்கு தோனி அதிக முக்கியத்துவம் கொடுத்ததுக்கு காரணம் இதுதான் – ரெய்னா விளக்கம்

Raina
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடதுகை ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மிஸ்டர் ஐபிஎல் என்கிற பட்டத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றவர். அதோடு சென்னை ரசிகர்கள் மத்தியில் சின்ன தல என்று அன்புடன் அழைக்கப்படும் அவர் சென்னை அணியின் வெற்றிகரமான பயணத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனெனில் சென்னை அணிக்கு தோனியின் கேப்டன்சி எந்த அளவிற்கு பலமாக பார்க்கப்படுகிறதோ அந்த அளவில் டாப் ஆர்டரில் சுரேஷ் ரெய்னாவின் அதிரடியான ஆட்டமும் ஒரு பலம். சென்னை அணி இவ்வளவு பெரிய வெற்றிகரமாக அணியாக திகழ்வதற்கு அவரும் ஒரு முக்கிய பங்கு என்றால் அது மிகையல்ல.

Raina

- Advertisement -

அந்த அளவிற்கு தனது பங்களிப்பினை சென்னை அணிக்காக வழங்கி வந்த அவர் கடைசியாக 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரோடு சென்னை அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார். அதன்பிறகு 2022-ஆம் ஆண்டு அவரை ஏலத்தில் கூட சென்னை அணி எடுக்க முன்வரவில்லை. 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய ரெய்னா 12 போட்டிகளில் 17 ரன்கள் சராசரியுடன் 160 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றம் அளித்தார்.

அதன் காரணமாகவே அவர் வெளியேற்றப்பட்டு அந்த இடத்திற்கு ராபின் ஊத்தப்பா கொண்டுவரப்பட்டார். அதேபோன்று 2021-ஆம் ஆண்டு முக்கியமான குவாலிஃபயர் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என முக்கிய போட்டிகளில் சுரேஷ் ரெய்னா இடம்பெறாமல் ராபின் உத்தப்பா அவரது இடத்தில் விளையாடி இருந்தார். நாக்அவுட் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரெய்னா 2021-ஆம் ஆண்டு பின்வரிசை போட்டிகளில் விளையாடாததற்கு என்ன காரணம்? தோனி தன்னை தவிர்த்து ராபின் உத்தப்பாவை ஏன் விளையாட வைத்தார்? என்பது குறித்து தற்போது ரெய்னா ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

Uthappa-2

இதுகுறித்து அவர் கூறுகையில் : தோனி அந்த நாக்கவுட் சுற்றுக்கு முன்னதாகவே என்னிடம் வந்து ராபின் உத்தப்பாவை உங்களுக்கு பதிலாக ஆட வைக்க போகிறேன் என்று கேட்டுக் கொண்டார். நானும் அவரிடம் உத்தப்பா இந்த ஆண்டு கடினமாக உழைத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே அவருக்கு நீங்கள் வாய்ப்பினை வழங்கலாம் என்றும் கூறினேன் என ரெய்னா விளக்கம் அளித்துள்ளார்.

- Advertisement -

அதாவது தோனியின் வேண்டுகோளுக்கு இணங்கவே ரெய்னா தனது இடத்தில் உத்தப்பாவை விளையாட வைக்க சம்மதம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். தோனியுடன் நெருங்கிய நண்பராக இருக்கும் அவர் தோனி குறித்து பேசுகையில் : நாங்கள் பல போட்டிகளில் ஒன்றாக விளையாடியுள்ளோம்.

இதையும் படிங்க : வீடியோ : அதிர்ஷ்டமில்லா பேட்ஸ்மேன் – வரலாற்றில் இப்படி ஒரு அவுட்டை பாத்துருக்கவே மாட்டீங்க, ரசிகர்கள் வியப்பு

இந்திய அணியில் அவருடன் தொடர்ச்சியாக விளையாடி இருக்கிறேன். அதேபோன்று ஐ.பி.எல் தொடரிலும் அவருடன் விளையாடியது எனக்கு கிடைத்த பாக்கியம். நாங்கள் இருவரும் வெவ்வேறு நகரங்களில் இருந்து வந்திருந்தாலும் நாட்டுக்காகவும் சரி, ஐபிஎல்-லும் சரி பல போட்டிகளில் ஒன்றாக விளையாடி உள்ளோம். அவர் மிகச்சிறந்த கேப்டன், நல்ல மனிதர் என்றுமே என்னுடைய நண்பர் என ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement