வீடியோ : அதிர்ஷ்டமில்லா பேட்ஸ்மேன் – வரலாற்றில் இப்படி ஒரு அவுட்டை பாத்துருக்கவே மாட்டீங்க, ரசிகர்கள் வியப்பு

Harry Brook Out
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதும் பழமை வாய்ந்த 2023 ஆஷஸ் தொடர் ஜூன் 12ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கியது. நூற்றாண்டை கடந்து வெற்றிகரமாக நடைபெறும் இந்த கௌரவமான தொடரை வெல்வதற்கு இரு நாடுகளை சேர்ந்த வீரர்களும் ஆக்ரோசத்துடன் மோதிக் கொள்வார்கள். அதனால் அனல் பறக்கும் இந்த தொடர் இரு நாடுகள் மட்டுமல்லாமல் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அந்த நிலையில் இம்முறை பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியா, பாகிஸ்தான் போன்ற அணிகளை அடித்து நொறுக்கி தொடர் வெற்றிகளைப் பெற்று வரும் இங்கிலாந்து சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்வோம் என்று ஆரம்பத்திலேயே எச்சரித்தது.

மறுபுறம் அந்த ஆட்டமெல்லாம் மற்றவர்களிடம் வைத்துக் கொள்ளுங்கள் தரமான பவுலிங்கை கொண்ட எங்களிடம் வேலைக்காகாது என்று பதிலடி கொடுத்த ஆஸ்திரேலியா சமீபத்தில் இந்தியாவை டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோற்கடித்து உலக சாம்பியனாக இத்தொடரில் களமிறங்கியுள்ளது. அந்த நிலையில் பர்மிங்காம் நகரில் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு பென் டூக்கெட் 2 பவுண்டரியை பறக்கவிட்டு அதிரடியை துவக்கினாலும் 12 (10) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

வித்தியாசமான அவுட்:
இருப்பினும் மறுபுறம் நின்ற ஜாக் கிராவ்லியுடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஓலி போப் நிதானமாக செயல்பட்டு 2வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை செய்த போதிலும் 31 (44) ரன்களில் நேதன் லயன் சுழலில் சிக்கினார். அதே போல் மறுபுறம் அசத்திய ஜாக் கிராவ்லி 61 (73) ரன்களில் அவுட்டாக அடுத்ததாக களமிறங்கிய இளம் வீரர் ஹரி ப்ரூக் சற்று அதிரடியாக விளையாட முயற்சித்தார். குறிப்பாக சமீபத்திய ஐபிஎல் தொடரில் மோசமாக செயல்பட்டு விமர்சனங்களை சந்தித்த அவர் அதற்கு பதிலடி கொடுக்க வகையில் 4 பவுண்டரியுடன் 32 ரன்கள் எடுத்து அசத்தி கொண்டிருந்தார்.

இருப்பினும் நேதன் லயன் வீசிய 37வது ஓவரின் 2வது பந்தை எதிர்கொண்ட அவர் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆகி வந்ததால் அடிக்காமல் பேட்டை மேலே உயர்த்தி தடுத்தார். ஆனால் பிட்ச்சாகி நன்றாக சுழன்று வந்த அந்த பந்து எக்ஸ்ட்ரா பவுன்ஸ் காரணமாக திடீரென எழும்பி அவருடைய இடது தொடைக்கு மேலே பட்டது. அப்படி அவருடைய உடம்பில் பட்டதும் நேராக மேலே சென்ற பந்தை ஆஸ்திரேலிய வீரர்கள் கேட்ச் பிடிப்பதற்காக தேடினர்.

- Advertisement -

ஆனால் நேதன் லயன் வீசிய சுழல் மற்றும் வேகத்துக்கு ஹரி ப்ரூக் உடலில் பட்டதும் யாராலும் கணிக்க முடியாத கோணத்திலும் வேகத்திலும் வலது பக்கமாக சென்ற பந்து அப்படியே காற்றில் திடீரென இடது பக்கமாக திரும்பி தரையில் பட்டது. குறிப்பாக நேதன் லயன் கொடுத்த சுழலை விட 2வது முறையாக பந்து தரையில் பட்டதும் தாறுமாறாக சுழன்று நேராக ஸ்டம்ப்களில் அடித்து போல்ட்டாக்கியது. அந்த சமயத்தில் பந்து எங்கே சென்றது என ஹரி ப்ரூக் தேடிக் கொண்டிருந்த நிலையில் ஸ்டம்ப்களில் சத்தம் கேட்டதால் அவுட்டானதை பார்த்து ஏமாற்றத்துடன் தலையசைத்துக் கொண்டே பெவிலியன் திரும்பினார்.

இதையும் படிங்க: இந்திய அணி நிர்வாகத்தால் ஆஸ்திரேலிய தொடருடன் ரிட்டையராக போறேன்னு என் மனைவிகிட்ட சொன்னேன் – அஸ்வின் வேதனை

அதை ஆஸ்திரேலிய வீரர்கள் கொண்டாடிய நிலையில் வரலாற்றில் நிறைய வித்தியாசமான அவுட்களை பார்த்துள்ளோம் ஆனால் இது பேட்ஸ்மேனுக்கு அதிர்ஷ்டமில்லாததால் ஏற்பட்ட அவுட் என வர்ணனையாளர்கள் நேரலையில் பேசினர். அதே போல இதற்கு முன் வித்தியாசமான பல அவுட்டுக்களை பார்த்துள்ள ரசிகர்களுக்கு இப்படியும் அவுட்டாவங்களா? என்று பேசும் அளவுக்கு அது வியப்பை ஏற்படுத்துகிறது. அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்துக்கு பென் ஸ்டோக்ஸ் 1 ரன்னில் அவுட்டானலும் சற்று முன் வரை 203/5 ரன்கள் ரன்கள் எடுத்துள்ள நிலையில் களத்தில் ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ உள்ளனர்.

Advertisement