உண்மையிலேயே இதை என்னால நம்பமுடியல.. லக்னோ அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு – பேட் கம்மின்ஸ் பேட்டி

Cummins
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 57-வது லீக் போட்டியானது நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை குவித்தது. லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 48 ரன்களையும், ஆயுஷ் பதோனி 55 ரன்களையும் குவித்தனர். பின்னர் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய :

- Advertisement -

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது முதல் பந்தில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 9.4 ஓவர்களில் விக்கெட் எதுவும் இழக்காமல் 167 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றனர். இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி சார்பாக அபிஷேக் ஷர்மா 75 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 89 ரன்களையும் குவித்து ஆட்டமிழக்காமல் அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில் : டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரும் வேறு மைதானத்தில் விளையாடுவது போன்று ஆடினார்கள். அவர்கள் இருவரது ஆட்டத்தையும் பார்த்தால் ஒரு பவுலராக எனக்கு மிகவும் கடினமாக உள்ளது.

- Advertisement -

மிகவும் சுதந்திரமாக இந்த போட்டியில் அவர்கள் பேட்டிங் செய்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே டிராவிஸ் ஹெட் இதேபோன்று மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடினமான ஏரியாக்களில் பவுண்டரிகளை அடிக்கும் அவர் பெரும்பாலும் மிடில் பேட்டில் விளையாடுகிறார். அதே போன்று அபிஷேக் ஷர்மாவும் சுழற்பந்துவீச்சு மற்றும் வேகப்பந்து வீச்சு என இரண்டிற்கு எதிராகவும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்.

இதையும் படிங்க : இப்படி செய்வேன்னு நானே நினைக்கல.. யுவராஜ், லாராவுக்கு நன்றி.. பாராட்டு அவரை சேரும்.. அபிஷேக் பேட்டி

முதல் 6 ஓவர்களில் இரண்டு பீல்டர்கள் மட்டுமே வெளியில் இருப்பதினால் பவுலர்களால் பேட்ஸ்மேன்களை தடுத்து நிறுத்துவது கடினமாக உள்ளது. இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது மிகச் சிறப்பாக இருப்பதை பார்க்க முடிந்தது. இந்த தொடரில் எங்களது அணியின் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இருந்தாலும் இந்த போட்டி 10 ஓவர்களுக்குள் முடிந்ததை என்னால் நம்பவே முடியவில்லை என பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement