இந்த 2025 ஐ.பி.எல் தொடரின் டேஞ்சரான ஓபனிங் ஜோடி இவங்கதான் – சுரேஷ் ரெய்னா கணிப்பு

Raina
- Advertisement -

நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது கடந்த மார்ச் 22-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அதோடு இந்தமுறை வீரர்களின் அணி மாற்றமானது நடைபெற்றுள்ளதால் எந்த அணி பலமான அணியாக இருக்கும்? எந்தெந்த வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடுவார்கள்? எந்த அணி அதிக வெற்றிகளை குவிக்கும்? என்பது போன்ற பல்வேறு விவாதங்களும் தற்போது சமூக வலைதளத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டு டேஞ்சரான ஓப்பனிங் ஜோடி இவங்கதான் : சுரேஷ் ரெய்னா

தற்போது இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் மட்டுமே முடிவடைந்துள்ள வேளையில் இந்த சீசனானது வழக்கமான தொடர்களை விட மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. நடைபெற்று முடிந்துள்ள இந்த நான்கு போட்டிகளில் முதல் போட்டியானது கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

- Advertisement -

அந்த போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் மோதிய வேளையில் பெங்களூரு அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணியை வீழ்த்தியிருந்தது. அந்த போட்டியின் போது முதலில் விளையாடியிருந்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 16.2 ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 177 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அந்த போட்டியின் போது பெங்களூரு அணியின் துவக்க வீரர்களான பிலிப் சால்ட் 56 ரன்களையும், விராட் கோலி 59 ரன்களையும் குவித்து அசத்தியிருந்தனர். இந்நிலையில் இந்த நடப்பு 2025-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான சிறந்த துவக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் ஜோடி தான் திகழ்வார்கள் என முன்னாள் சிஎஸ்கே வீரரான சுரேஷ் ரெய்னா பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : முதல் போட்டியில் விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர் விளையாடியது ஒரு டிரைலர் தான். இனிமேல் அவர்கள் இன்னும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். இப்படியே சென்றால் இந்த தொடரின் மிகவும் டேஞ்சரான ஓப்பனிங் ஜோடி இவர்களாகத்தான் இருப்பார்கள்.

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் செய்யும் செயல்களால் லக்னோ அணிக்கு தான் ஆபத்து – எச்சரித்த அம்பத்தி ராயுடு

ஏனெனில் விராட் கோலி வழக்கமாக விளையாடும்போது எதிர்புறம் ஒரு வீரர் வேகமாக விளையாடினால் அவருக்கு ஏற்றவாறு ஸ்ட்ரைக் ரொட்டேஷன் கொடுப்பார். ஆனால் இம்முறை அவரும் அதிரடியாக விளையாடி பந்துவீச்சாளர்களை தெறிக்க விடுகிறார் என்பதனால் நிச்சயம் இந்த ஜோடி ஆபத்தான ஒரு ஜோடியாக இருக்கும் என சுரேஷ் ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement