CSK சின்ன தல ரெய்னாவிற்கு சென்னை ரசிகர்களால் குவியும் பாராட்டு ..!

rainashot
- Advertisement -

வரும் ஜூலை 15 ஆம் தேதி இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்குபெற இங்கிலாந்து செல்கிறது. இந்த தொடரில் விளையாடும் இந்திய வீராகள் பட்டியலில் இருக்கும் ரெய்னாவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது.

suresh-raina

- Advertisement -

ரெய்னா இடத்தில் முதலில் அம்பதி ராயுடு தான் விளையாட இருந்தார். ஆனால், சமீபத்தில் நடந்த ‘யோ யோ’ தேர்வில் 14 புள்ளிகளை மட்டுமே பெற்று இந்திய அணியில் இடம் பெரும் வாய்ப்பை இழந்தார். இதனால் இவருக்கு பதிலாக சுரேஷ் ரெய்னா அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் ராயுடு மற்றும் சுரேஷ் ரெய்னா இடம்பெற்றிருந்தனர். சென்னை அணியில் சிறப்பாக விளையாடி வந்த ராயுடு 602 ரன்களை குவித்து இந்த சீசனில் அதிக ரன்களை குவித்த டாப் 5 பேட்ஸ்மேன்கள் பட்டியலிலும் இடம்பெற்றிருந்தனர். இதனால் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பும் அளிக்கப்பட்டிருந்தது.

rainasuresh

அதே போல சென்னை அணியின் இடது கை அதிரடி பேட்ஸ்மேனாக இருந்த ரெய்னா, 15 போட்டிகளில் 445 ரன்களை குவித்தார். சென்னை அணியில் இந்த இரண்டு வீரர்களும் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வந்தனர். இந்நிலையில் சின்ன தல ரெய்னாவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ட்விட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அதே போல ராயுடுவும் விரைவில் நல்ல பார்மில் திரும்ப வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.

Advertisement