சி.எஸ்.கே அணியில் தோனியை போலவே நிதானமாவும் பொறுமையாவும் இருப்பார் இவர்தான் – சுரேஷ் ரெய்னா புகழாரம்

Raina
- Advertisement -

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்று அசத்தியது. இதன்மூலம் ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை அணியானது ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை அணியின் சாதனையை சமன் செய்துள்ளது.

CSK 2023

- Advertisement -

அதனை தொடர்ந்து அடுத்த 2024-ஆவது சீசனிலும் தோனி விளையாடுவார் என்று கூறப்பட்டிருந்தாலும் அடுத்து சீசனிற்குள் தோனிக்கு 42 வயதாகிவிடும். எனவே கட்டாயம் அடுத்த சீசனே அவருடைய கடைசி தொடராக இருக்கலாம்.

அதனால் அடுத்த சிஎஸ்கே அணியின் கேப்டனுக்கான தேடல் நிச்சயம் இந்த தொடரில் இருந்தே ஆரம்பிக்கும் என்று தெரிகிறது. அந்த வகையில் சி.எஸ்.கே அணியின் கேப்டனாக செயல்பட ரவீந்திர ஜடேஜா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இருவரில் ஒருவருக்கே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Ruturaj Gaikwad

அதிலும் கடந்த 2022-ஆம் ஆண்டு சீசனில் தனக்கு கிடைத்த கேப்டன்சி வாய்ப்பை ஜடேஜா தவறவிட்டுவிட்டார். எனவே அடுத்த சி.எஸ்.கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் மகாராஷ்டிரா பிரிமியர் லீக்கில் அவர் அசத்தலான கேப்டன்சியை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் சென்னை அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா ருதுராஜ் கெய்க்வாட்டை வெகுவாக பாராட்டி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : ருதுராஜ் கெய்க்வாட் தோனியை போன்றவர் தான். அவரிடம் இருக்கும் நிதானமும், பொறுமையையும் தோனியை ஞாபகப்படுத்துகிறது.

இதையும் படிங்க : டிஎன்பிஎல் தொடரை உலகளவில் ஃபேமஸ் பண்ண இப்டி செய்யாதீங்க – அஸ்வினை விமர்சித்த முன்னாள் வீரர்

ருதுராஜ் போட்டியை மிகவும் நிதானமாகவும், பொறுமையாகவும் கணிக்க கூடியவர். போட்டியின் போது எப்போதுமே அவர் அழுத்தத்தில் இருப்பதை வெளிக்காட்டியதில்லை. அதுமட்டுமின்றி தற்போது மகாராஷ்டிரா பிரீமியர் லீக்கிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என ரெய்னா பாராட்டி உள்ளதால் அடுத்த சிஎஸ்கே-வின் கேப்டன் இவர்தானா? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement