
இந்திய அணியின் அனுபவ வீரர் வீரரான கே.எல் ராகுல் கடந்த 2014-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 63 டெஸ்ட் போட்டிகள், 85 ஒருநாள் போட்டிகள் மற்றும் 72 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுதவிர்த்து கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் அவர் 145 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார். அதுதவிர்த்து சில சீசன்களில் ஐ.பி.எல் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் தொடர்ச்சியாக கே.எல் ராகுல் இடம் பிடித்து விளையாடி வந்தாலும் டி20 போட்டிகளை பொருத்தவரை அவர் இந்திய அணியில் இருந்து கழட்டி விடப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகிறது. இளம் வீரர்களின் வருகை காரணமாக அவரால் மீண்டும் சர்வதேச டி20 போட்டிகளுக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிகளில் அசத்தலான ரன் குவிப்பை வழங்கி வரும் அவர் டி20 வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இந்நிலையில் கே.எல் ராகுலை யாராலும் இந்திய டி20 அணியில் இருந்து தள்ளி வைக்க முடியாது என்றும் விரைவில் அவர் டி20 போட்டிகளுக்கும் கம்பேக் கொடுப்பார் என முன்னாள் இந்திய வீரரான சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : கே.எல் ராகுலை பொறுத்தவரை மிகச் சிறப்பாக ரன் குவித்து வருகிறார். டி20 போட்டிகளில் விரைவாக ரன் குவிப்பது அவசியம். அந்த வகையில் டி20 போட்டிகளில் விரைவாக ரன்களை குவிப்பது மட்டுமின்றி கிளாஸான ஆட்டத்தையும் அவர் வெளிப்படுத்துகிறார். அவரது ஆட்டத்தில் நல்ல முன்னேற்றமும், நல்ல விழிப்புணர்வும் இருக்கிறது.
அதோடு அவர் டி20 போட்டிகளுக்காக நிறையவே உழைத்து வருகிறார். எனவே நிச்சயம் அவர் இந்திய டி20 அணியில் கம்பேக் கொடுப்பார் என சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த 2025 ஐ.பி.எல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதம் என 149 ஸ்டிரைக் ரேட்டுடன் 539 ரன்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 15 சிக்ஸ் 134 ரன்ஸ்.. நோட்புக்கால் வந்த சண்டை.. நொறுக்கிய நிதிஷ் ராணாவிடம் மோதிய திக்வேஷ்.. நடந்தது என்ன?
அது மட்டுமில்லாமல் ஐபிஎல் போட்டிகளில் 5200 ரன்களுக்கு மேல், சர்வதேச டி20 போட்டிகளில் 2,200 ரன்களுக்கு மேல் குவித்துள்ள அவர் நிச்சயம் இன்னும் சில ஆண்டுகள் டி20 போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.