டெல்லியில் 2025 டிபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் ஆகஸ்ட் 29ஆம் தேதி டெல்லியில் எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் மேற்கு டெல்லி லயன்ஸ் மற்றும் தெற்கு டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற மேற்கு டெல்லி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய தெற்கு டெல்லி 20 ஓவரில் சிறப்பாக விளையாடி 201/5 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அன்மோல் சர்மா 55 (39), கேப்டன் தேஜஸ்வி தஹியா 60 (33), சுமித் மாதூர் 48* (26) ரன்கள் எடுத்தார்கள். மேற்கு டெல்லிக்கு அதிகபட்சமாக ரித்திக் ஷாக்கின் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய மேற்கு டெல்லிக்கு அன்கீத் குமார் 4, ஆயுஷ் தோசேகா ரன்களில் அவுட்டானார்கள்.
ராணா அசத்தல்:
ஆனால் அடுத்து வந்த கேப்டன் நிதிஷ் ராணா தெற்கு டெல்லி பவுலர்களை அடித்து நொறுக்கினார். அவருடன் சேர்ந்து 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கிரிஷ் யாதவ் 31 (22) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். மறுபுறம் தொடர்ந்து பட்டாசாக விளையாடிய நித்திஷ் ரானா அரை சதத்தை அடித்தும் ஓயாமல் தெற்கு டெல்லி பவுலர்களை விளாசினார்.
நேரம் செல்ல செல்ல 200க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் பந்தாடிய ராணா 42 பந்துகளில் சதத்தை அடித்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் கடைசி வரை அவுட்டாகாமல் 8 பவுண்டரி 15 சிக்ஸருடன் 134* (55) ரன்கள் அடித்தார். அவருடன் மயங் குசைன் 15* (16) ரன்கள் எடுத்ததால் 17.1 ஓவரிலேயே 202/3 ரன்களை எடுத்த வடக்கு டெல்லி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்று குவாலிபயர் 2 போட்டிக்கு தகுதி பெற்றது.
நோட்புக்கால் சண்டை:
தெற்கு டெல்லிக்கு அதிகபட்சமாக சுமித் குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை சந்தித்து வெளியேறியது. முன்னதாக அப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ராணாவுக்கு எதிராக ஒரு பந்தை வீச சென்ற திக்வேஷ் ரதி கடைசி நேரத்தில் வீசவில்லை. அடுத்த பந்தை திக்வேஷ் வீசிய போது அதை எதிர்கொள்வதிலிருந்து கடைசி நேரத்தில் விலகிய ராணா தக்க பதிலடி கொடுத்தார்.
அதனால் கடுப்பான திக்வேஷ் சில வார்த்தைகள் சொன்னதற்கு “போய் பந்தை போடு” என்று ராணா பதிலடி கொடுத்தார். அதே வேகத்தில் பந்தை எதிர்கொண்ட ராணா ரிவர்ஸ் ஸ்கூப் வாயிலாக சிக்சர் அடித்து தன்னுடைய பேட்டில் நோட்புக்கில் எழுதுவது போல எழுதி முத்தம் கொடுத்தார். அதாவது கடந்த 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக திக்வேஷ் விக்கெட் எடுக்கும் போதெல்லாம் புத்தகத்தில் எழுதுவது போல கொண்டாடினார்.
இதையும் படிங்க: ஃபிட்ஸ் ஃபீஸஸ் சுனாமி கருத்தை.. ஜடேஜா, ஷமி கிரிஞ்சுன்னு நினைச்சுட்டாங்க.. மஞ்ரேக்கர் ஓப்பன்டாக்
அதனால் ஒரு போட்டியில் விளையாடத் தடையும் பெற்ற அவருக்கு இப்போட்டியில் ராணா அவருடைய வழியிலேயே பதிலடி கொடுத்தார். அதன் காரணமாக கோபமடைந்த திக்வேஷ் அவரிடம் வாக்குவாதம் செய்தார். அதற்கு ராணாவும் பதிலடி கொடுக்கச் சென்றதால் இருவருக்கிடையே ஏற்பட்ட சண்டையை அம்பயர்கள், சக வீரர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.



