
இந்தியாவில் ஆண்டுதோறும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பினை பெற்றுள்ளதால் அடுத்த 2026 ஆம் ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் இரண்டாம் வாரம் நடைபெறவுள்ளது.
அதற்கு முன்னதாக நவம்பர் 15-ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கும் விரும்பும் வீரர்களின் பட்டியலையும், வெளியேற்ற விரும்பும் வீரர்களின் பட்டியலையும் வெளியிட வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் பத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலையும், வெளியேற்ற விரும்பும் வீரர்களின் பட்டியலையும் தயார் செய்து வருகிறது.
அதோடு அந்த பட்டியல் வெளியான பின்னர் ஒவ்வொரு அணியும் தங்களிடம் இருக்கும் இருப்பு தொகையை வைத்துக்கொண்டு மினி ஏலத்தில் பங்கேற்று தங்களது அணிக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்து தங்களது அணிகளை பலப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நடப்பு 2025-ஆம் ஆண்டு டெல்லி கேபிட்டல்ஸ் அணி அக்சர் பட்டேல் தலைமையில் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வேளையில் அந்த அணியின் முதுகெலும்பாக பேட்டிங் துறையில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல் ராகுல் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக டெல்லி அணியில் இருந்து வெளியேற மாட்டார் என்று தான் நினைப்பதாக முன்னாள் சி.எஸ்.கே வீரரான சுரேஷ் ரெய்னா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : என்னைப் பொறுத்தவரை கே.எல் ராகுலை டெல்லி அணி மிகச் சிறப்பான தொகைக்கு ஏலத்தில் எடுத்திருந்தது. டி20 போட்டிகளில் அசத்தலான பேட்ஸ்மேனான அவர் மிகச் சிறப்பாகவும் விக்கெட் கீப்பிங் செய்வதால் இரண்டு பணிகளை அவர் டெல்லி அணிக்காக மிகச்சிறப்பாக செய்துள்ளார். மேலும் டெல்லி அணியை பொறுத்தவரை அந்த அணியின் பேட்டிங்கின் முதுகெலும்பாக அவரே இருப்பதனால் நிச்சயம் அவர் அந்த ஆட்டத்தை ரசித்து விளையாடுவார்.
இதையும் படிங்க : இன்னும் 2 ரன்கள் போதும்.. இரண்டாம் நாள் ஆட்டத்தில் 18 ஆவது இந்திய வீரராக கே.எல் ராகுல் – நிகழ்த்தவுள்ள சாதனை
எனவே டெல்லி அணியில் இருந்து அவர் வெளியேற விரும்ப மாட்டார். அக்சர் பட்டேலும் அந்த கடந்த சில ஆண்டுகளாகவே டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் அசத்தலாக செயல்பட்டு வரும் வேளையில் அவரே அடுத்த ஆண்டும் அந்த அணியின் கேப்டனாக நீடிப்பார் என்று நினைக்கிறேன். என்னிடம் இருக்கும் ஒரே கேள்வி டெல்லி அணி டூபிளெஸ்ஸிசை விடுவிக்குமா? அல்லது தக்க வைக்குமா? என்பது மட்டும் தான் என சுரேஷ் ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது.