இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலமானது டிசம்பர் 16-ஆம் தேதியான இன்று அபுதாபியில் நடைபெற இருக்கிறது. இந்த மினி ஏலத்தில் பத்து அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டு தங்களது அணிக்கு தேவையான வீரர்களை வாங்கி அணியை பலப்படுத்த வகையில் சில முக்கிய முடிவுகளை எடுக்க காத்திருக்கின்றனர்.
சி.எஸ்.கே அந்த பையனை வாங்கணும் : சுரேஷ் ரெய்னா கருத்து
இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் அதிக பணம் வைத்திருக்கின்ற காரணத்தினால் ஏலத்தில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மோதல் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த மினி ஏலத்தில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகள் எந்தெந்த வீரர்களை எடுக்கப்போகிறார்கள்? என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சி.எஸ்.கே அணியானது இந்த மினி ஏலத்தில் எந்தெந்த வீரர்களை வாங்க வேண்டும் என்று பல்வேறு முன்னாள் வீரர்கள் தங்களது கணிப்புகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா சர்ஃபராஸ் கானை சிஎஸ்கே அணி முறை மினி ஏலத்தில் எடுக்க வேண்டும் என்ற தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : சர்பராஸ் கான் தற்போது நல்ல பார்மில் இருந்து வருகிறார். அவரை சிஎஸ்கே அணி வாங்கும் பொழுது மிடில் ஆர்டரில் அவரை ஆறு போட்டியில் விளையாட வைத்தால் அதில் இரண்டு போட்டிகளில் அவர் சி.எஸ்.கே அணியை வெற்றி பெற வைத்தால் கூட அவரை வாங்கியது நியாயமாகிவிடும்.
சேப்பாக்கம் போன்ற சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் தொழில்நுட்ப ரீதியாக விளையாடும் வீரர்களுக்கு சாதகம் அதிகம் கிடைக்கும். அந்த வகையில் சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பாக கையாளும் சர்பராஸ்கான் சென்னை அணியில் இருப்பது நிச்சயம் சிஎஸ்கே அணிக்கு பலத்தை தரும்.
இதையும் படிங்க : 1996 உ.கோ வென்ற இலங்கை கேப்டன் ரணதுங்கா கைது? காத்திருக்கும் போலீஸ்.. காரணம் என்ன?
தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் நல்ல பார்மில் இருக்கும் அவருடைய ஷாட் ரேஞ்ச் மற்றும் திறன் ஆகியவை அற்புதமாக இருக்கிறது. எனவே அவரை சி.எஸ்.கே அணி விலைக்கு வாங்கி மிடில் ஆர்டரில் விளையாட வைத்தால் நிச்சயம் அவர் சிறப்பாக விளையாடுவார் என சுரேஷ் ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது.



