சேவாக் மாதிரி ஸ்டைலை கொண்ட.. இந்தப் பையன் சிஎஸ்கே அணிக்கு 10 வருஷம் அசத்துவாரு.. ரெய்னா நம்பிக்கை

Suresh Raina 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை 99% இழந்துள்ளது. குறிப்பாக ஏப்ரல் 25ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் ஹைதெராபாத் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை தோற்றது. அதனால் 7வது தோல்வியை சந்தித்த சென்னை லீக் சுற்றுடன் வெளியேறுவதற்கு தயாராகியுள்ளது.

அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சென்னை ஆயுஸ் மாத்ரே 30, தேவால்ட் ப்ரேவிஸ் 42 ரன்கள் எடுத்த உதவியுடன் 155 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய ஹைதராபாத் 18.4 ஓவரில் 155/5 ரன்கள் எடுத்து தங்களுடைய மூன்றாவது வெற்றியைப் பெற்றது. அதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை ஹைதராபாத் அணி தக்க வைத்துக் கொண்டது.

- Advertisement -

சேவாக் போல:

முன்னதாக இந்த வருடம் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வழக்கத்துக்கு மாறாக மோசமாக இருந்து வருகிறது. அந்த சூழ்நிலையில் கடந்தப் போட்டியில் அறிமுகமான 17 வயது இளம் வீரர் ஆயுஸ் மாத்ரே மும்பைக்கு எதிராக அதிரடியாக 32 ரன்கள் அடித்து அசத்தினார். அதே போல இந்தப் போட்டியிலும் 6 பவுண்டரிகளை பறக்க விட்ட அவர் 30 (19) ரன்கள் விளாசி நல்ல துவக்கத்தைக் கொடுத்தார்.

இருப்பினும் மற்ற பேட்ஸ்மேன்கள் அசத்தத் தவறியதால் சென்னை தோற்றது. இந்நிலையில் ஜாம்பவான் வீரந்திர சேவாக் போல பேட்டிங்கில் ஆயுஷ் மாத்ரேவின் தலை மற்றும் கால் திடமாக இருப்பதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். எனவே இங்கிருந்து அவர் அடுத்த 10 வருடங்கள் சிஎஸ்கே அணிக்கு அசத்துவார் என்று ரெய்னா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ரெய்னா நம்பிக்கை:

மேலும் கடந்தப் போட்டியில் அவர் சூரியகுமார் யாதவ் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரது பாராட்டுகளை பெற்றதாகவும் ரெய்னா குறிப்பிட்டுள்ளார். இது பற்றி ரெய்னா நேரலையில் பேசியது பின்வருமாறு. “அவருடைய கால்களை பாருங்கள். அவருடைய தலை இருக்கும் பொசிஷனை பாருங்கள். சேவாக் பாய் தான் இதே போன்ற செட்டப்பை கொண்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது”

இதையும் படிங்க: இந்த திட்டத்தை வெச்சு தோனியை அவுட்டாக்குனேன்.. பீஸ்களை சேத்து ஹைதராபாத் வென்றது பற்றி ஹர்சல் பேட்டி

“சேவாக் பாய் பேட்டிங் செய்யும் போதெல்லாம் இதே போல தான் தலை நேராக இருக்கும். கடந்தப் போட்டியில் வான்கடே மைதானத்தில் அவர் ரன்கள் அடித்த போது சூரியகுமார் நேரடியாக பாராட்டினார். பின்னர் ரோஹித் சர்மாவும் அவரிடம் பேசினார்” என்று கூறினார். மொத்தத்தில் இந்த வருடம் சிஎஸ்கே அணி தோற்றாலும் ஆயுஷ், ப்ரேவிஸ், சாய்க் ரசீத், நூர் அஹ்மத் போன்ற தரமான இளம் வீரர்கள் கிடைத்துள்ளார்கள். எனவே அடுத்த வருடம் சென்னை வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்று நம்பலாம்.

Advertisement