ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 25ஆம் தேதி 43வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் சென்னையை அதனுடைய சொந்த மண்ணில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்த ஹைதராபாத் 3வது வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்துக்கு முன்னேறியது. அப்போட்டியில் முதலில் விளையாடிய சென்னை 155 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தது.
அதிகபட்சமாக ஆயுஸ் மாத்ரே 30, தேவால்ட் ப்ரேவிஸ் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஹைதராபாத் அணிக்கு அதிகபட்சமாக ஹர்சல் படேல் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்த விளையாடிய ஹைதராபாத் 18.4 ஓவரில் 155/5 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கமிண்டு மெண்டிஸ் 32*, இஷான் கிசான் 44 ரன்கள் எடுத்த நிலையில் சென்னைக்கு அதிகபட்சமாக நூர் அகமது 2 விக்கெட்டுகள் எடுத்தும் 7வது தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.
ஹைதராபாத் ஆட்டநாயகன்:
இந்தத் தோல்வியால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பைக் கிட்டத்தட்ட எழுந்துள்ளது. மறுபுறம் பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக்கொண்ட ஹைதெராபாத் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஹர்ஷல் படேல் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் கடந்த போட்டிகளில் களைந்து கிடந்த திறமைகளை ஒன்று சேர்ந்து இப்போட்டியில் வென்றதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் தோனியை அவுட்டாகிய திட்டம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய வெற்றி. இதைக் கடந்த 3 – 5 போட்டிகளாக நாங்கள் முயற்சித்து வருகிறோம். ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் சில ஃபீஸ்கள் தவறிப் போனது. கட்டாயம் அனைத்துப் போட்டிகளிலும் வென்றாக வேண்டும் என்ற சூழ்நிலையில் இப்போட்டியில் அவை அனைத்தும் ஒன்றாக வந்து வெற்றிக்கு உதவியதில் மகிழ்ச்சி”
தோனி விக்கெட்:
“போட்டியின் ஆரம்பத்திலேயே சரியான லென்த்தை ஹிட் செய்து அதைத் தொடர்வது முக்கியம் என்று நினைத்தேன். அந்தப் பந்துகளுக்கு எதிராக கிடைமட்டமாக அடிப்பது கடினமாக இருந்தது. என்னை எதிரணி பேட்ஸ்மேன்கள் ஓவர் ஸ்கொயர் லெக், மிட் விக்கெட் திசைக்கு மேலே அடிக்க விரும்பினேன். அப்போது தான் லென்த்தை இழுத்து என்னுடைய வேகத்தை கலக்க முடியும்”
இதையும் படிங்க: மொத்தம் 6 பேர் இருந்தாங்க.. ஆனாலும் தோல்வியை தடுக்க முடியல – முதல்முறையாக சி.எஸ்.கே அணியில் நடந்த அதிசயம்
“தோனிக்கு எதிராக லென்த் பந்தை வீசுவதே என்னுடைய திட்டமாக இருந்தது. அவருக்கு எதிராக ஒயிட் பந்தை வீச முயற்சிக்கவில்லை. அவரை அவுட்டாக்கிய பந்து வித்தியாசமாக முயற்சித்த ஒரு வேரியசன் ஆகும். அது நன்றாக வரவில்லை என்றாலும் அந்த பந்து ஃபீல்டர் கைகளில் சென்று விழுந்ததில் மகிழ்ச்சி. எனக்கு நல்ல குடும்பம் இருப்பது களத்தில் சிறப்பாக விளையாட உதவுகிறது” எனக் கூறினார்.



