சுப்மன் கில் கேப்டனாக செய்யும் இந்த விடயங்கள் சூப்பரா இருக்கு – சுரேஷ் ரெய்னா புகழாரம்

Raina and Gill
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி 6 வெற்றிகள் மற்றும் இரண்டு தோல்விகளுடன் 12 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இன்னும் 6 போட்டிகள் அந்த அணிக்கு எஞ்சியுள்ள வேளையில் அதில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட குஜராத் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது உறுதி.

சுப்மன் கில் கேப்டன்சியில் அசத்துறாரு : சுரேஷ் ரெய்னா

நடப்பு ஐபிஎல் சீசனில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணியானது நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 39 ரன்கள் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தி அசத்தியது.

- Advertisement -

இந்த போட்டியின் போது குஜராத் அணி சார்பாக மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய சுப்மன் கில் 55 பந்துகளில் 3 சிக்சர் 10 பவுண்டரி என 90 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இந்த தொடரில் இதுவரை மூன்று அரை சதங்களுடன் 305 ரன்களை விளாசியிருக்கும் அவர் கேப்டனாகவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் குறித்து பேசிய சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா கேப்டன்சியில் சுப்மன் கில் அசத்துவதாக புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் போது சுப்மன் கில் நிதானமாக தனது நேரத்தை எடுத்துக்கொண்டு அதன் பின்னர் அதிரடியாக விளையாடினார்.

- Advertisement -

முன்பை விட தற்போது அதிரடியாக பேட்டிங் செய்யும் அவர் டாட் பால்கள் சதவீதத்தையும் குறைத்துள்ளார். ஒரு பேட்ஸ்மேனாக அசத்துவது மட்டுமின்றி கேப்டனாகவும் களத்தில் மிகச் சிறப்பாக செயல்படுகிறார். பீல்டர் நிற்க வைக்கும் வியூகம், பந்துவீச்சாளர்களை மாற்றுவது, தேவைக்கு ஏற்ப வீரர்களை பயன்படுத்துவது என சுப்மன் கில் கேப்டன்சியில் செய்யும் விடயங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது.

இதையும் படிங்க : முதல் இந்திய ஜோடியாக அசத்தல் சாதனையை நிகழ்த்திய சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் – விவரம் இதோ

முன்பு வளர்ந்து வரும் வீரராக இருந்த அவர் தற்போது மிகச் சிறப்பான கேப்டனாக மாறியுள்ளார் என்று ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது. குஜராத் அணி தங்களது அடுத்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக ஏப்ரல் 28-ஆம் தேதி விளையாடயிருக்கிறது.

Advertisement